ராம் கந்தசாமி தயாரிப்பில், அவரின் எழுத்து, இயக்கத்தில், கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி, சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள புஜ்ஜி அட் அனுப்பட்டி.
அனுப்பட்டி என்கிற ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் முருகேசன், சித்ரா தம்பதியர்களுக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் 20 நாட்களே ஆன ஒரு கருப்பு ஆட்டுக்குட்டியை பார்த்து அதனை, தன் வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆசைப்படுகிறாள் குட்டி பெண் துர்கா.
வீட்டிற்கு எடுத்து வந்து அந்த ஆட்டுக்குட்டியை ஆசையுடன் பாசத்துடன் அதற்கு புஜ்ஜி என்ற பெயர் வைத்து வளர்த்து வருகிறாள். அதே ஊரில் இருக்கும் சிவாஎன்னும் இளைஞன் அந்த இரு குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறான்.
ஒரு சமயத்தில் ஆட்டுக்குட்டியை தொலைத்த உரிமையாளர்கள் ஆட்டுக்குட்டி வாங்கிக்கொண்டு போய் விடுகின்றனர். இதனால் துர்கா அழுது கொண்டே இருக்க அவர்களை பாசமாக பார்த்துக் கொள்ளும் சிவா அந்த ஆட்டுக்குட்டியை விலை கொடுத்து வாங்கி வந்து அவரிடம் கொடுத்து அழகு பார்க்கிறார்.
கொஞ்ச நாள் கழித்து குடிகார அப்பாவாக இருக்கும் முருகேசன் குடிப்பதற்கு பணம் இல்லாததால் அந்த ஆட்டுக்குட்டியை விற்றுவிடுகிறான். இதனால் அந்த ஆட்டுக்குட்டியை மீட்டெடுப்பதற்காக அதனை தேடி செல்கின்றனர் அண்ணனும் தங்கையும் ஆட்டுக்குட்டியை மீட்டார்களா இல்லையா என்பதை புஜ்ஜி அட் அனுப்பட்டி படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை தயாரிப்பு, இயக்கம் : ராம் கந்தசாமி
இசை : கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு : அருண் மொழி சோழன்
எடிட்டிங் : சரவணன் மாதேஸ்வரன்