சென்னை 02 ஏப்ரல் 2025: இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் பயணத்தில் புரட்சியை வலுப்படுத்தும் மற்றும் புதுமைகளை உருவாக்கும் அமைப்பான இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) நிறுவனமானது ‘நில், யோசி, செயல்படு’ கொள்கையை அறிவிப்பதன் மூலம் டிஜிட்டல் பேமெண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அதன் உறுதியை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து மேன்மையடைந்து வருவதால், மோசடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பயனர்கள் விழிப்புடன் இருக்கவும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும் NPCI கேட்டுக்கொள்கிறது.
அதிகரித்துவரும் UPI பயன்பாடும் டிஜிட்டல் பாதுகாப்பிற்கான தேவையும்
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஒருங்கிணைந்த கட்டண இன்டர்ஃபேஸ் (UPI) ஆனது மிக முக்கியமான ஒன்றாகும். இது CY-2024 இல் மொத்த கட்டண அளவில் 83% இடத்தைப் பெற்றுள்ளது. மார்ச் 2025 இல், UPI ஆனது 18.30 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது, இது அளவில் ஆண்டுக்கு ஆண்டு 36% வளர்ச்சியையும் பரிவர்த்தனை மதிப்பில் ஆண்டுக்கு ஆண்டு 25% வளர்ச்சியையும் பெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், UPI பயன்பாட்டால் 74% வரை CAGR உயர்ந்துள்ளது.இது பரிவர்த்தனை அளவில் மிகப்பெரிய ரீடெயில் பேமெண்ட் முறையாகவும் மாறியுள்ளது. தொடக்கத்திலிருந்து, UPI 460 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு பிரிவுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைகளையும் எளிதாக்குகிறது.
NPCI-யின் பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு
UPI ஆனது வசதிக்காக மட்டுமல்லாமல், ஒவ்வொரு பரிவர்த்தனையின் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்யும் அதன், வலுவான பாதுகாப்பு கட்டமைப்பிற்காகவும் தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது. NPCI மேம்பட்ட நெறிமுறைகள் மற்றும் சாதன பிணைப்பு போன்ற கடுமையான பாதுகாப்புகளைப் பயன்படுத்துகிறது. இந்த அம்சம் ஒரு பயனரின் கணக்கை ஒரு குறிப்பிட்ட மொபைல் சாதனத்துடன் இணைக்கிறது, இதனால் பதிவுசெய்யப்பட்ட மொபைல் சாதனம் இல்லாமல் மூன்றாம் தரப்பினர் அதை அணுக முடியாது. இதனால் பாதுகாப்பும் இரட்டிப்பாகிறது. மேலும், எந்தவொரு பரிவர்த்தனையையும் அங்கீகரிப்பதற்கு முன்பு பயனர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் பயனரின் UPI பின்னைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டிய இரண்டு காரணி (two-factor) அங்கீகாரத்தை UPI கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நுகர்வோருக்கான ஆலோசனை: பாதுகாப்பாக இருப்பது எப்படி?
UPI வலுவான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருந்தாலும், மோசடி செய்பவர்கள் சமூக பொறியியல் தந்திரோபாயங்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். நுகர்வோர் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
NPCI அனைத்து UPI பயனர்களையும் நில், யோசி, செயல்படு’ கொள்கையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறது:
தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைக் கோரும் எதிர்பாராத அழைப்புகள், செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதற்கு முன் ஒரு நிமிடம் நிதானியுங்கள்.
நிறுவன வலைத்தளங்கள் அல்லது வாடிக்கையாளர் சேவை உதவி எண்கள் போன்ற அதிகாரப்பூர்வ ஆதாரங்களைச் சரிபார்த்து கோரிக்கைகளை சிந்தித்து சரிபார்க்கவும்
சந்தேகத்திற்கிடமான கோரிக்கைகளைத் தவிர்த்து, மோசடி முயற்சிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகாரளிப்பதன் மூலம் புத்திசாலித்தனமாகச் செயல்படுங்கள்.
ஒரு மோசடியை எவ்வாறு புகாரளிப்பது?
மோசடி நடந்ததாக சந்தேகிக்கும் பயனர்கள் உடனடியாக சம்பவங்களைப் புகாரளிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான வழக்குகளை தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் (1930) அல்லது தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்டல் (https://cybercrime.gov.in ) மூலம் புகாரளிக்கலாம். பயனர் தங்கள் வங்கியிலும் புகாரளிக்க வேண்டும். கூடுதலாக, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உதவும் வகையில் பயனர்கள் செய்திகளைச் சேமிக்க வேண்டும், ஸ்கிரீன் ஷாட்களை எடுக்க வேண்டும் மற்றும் ஆவண தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும்.
தகவலறிந்து விழிப்புடன் இருப்பதன் மூலம், பயனர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் டிஜிட்டல் பேமெண்டுகளின் வசதியை அனுபவிக்க முடியும். இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் தடையற்ற டிஜிட்டல் கட்டண அனுபவத்தை உறுதி செய்வதில் UPI உறுதிபூண்டுள்ளது.