பாலமுருகன் என்ற மீனவர் எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சேர்ந்தவர். அவர் 4 பேருடன் வங்கக் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது கடலில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு சென்றபோது, மூங்கிலில் செய்யப்பட்ட மிதவை ஒன்று மிதந்து வந்துள்ளது. அதில் பித்தளை உலோகத்தால் ஆன சுமார் ஒன்றரை அடிஉயரம் கொண்ட புத்தர் சிலையும் சில மண்பாண்டம் மற்றும் குடுவைகள் இருந்துள்ளன. அதனை தங்களது படகில் கட்டி கரைக்கு கொண்டுவந்த மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.