ஜே பி இயக்கத்தில், டேனியல் பாலாஜி, அருள் தாஸ், கே பாக்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ஸ்வேதா டாரதி, நயனா, தமிழ், ஜேக் அருணாச்சலம், ரங்கா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பிபி 180.
டேனியல் பாலாஜி காசிமேடு பகுதியில் மிகப் பெரும் ரவுடியாக இருக்கிறார். அவரை பார்த்தால் அனைவருமே பயப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளார். எவ்வளவு பெரிய ரவுடியாக இருந்தாலும் தன்னுடைய தலைவரான பாக்யராஜிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொள்கிறார்.
ஒரு விபத்தில் பாக்யராஜ் தான் அன்பாக வளர்த்த மகளை இழந்து விடுகிறார். போஸ்ட்மார்ட்டம் செய்து தான் ஒப்படைக்க முடியும் என்று மருத்துவரான தன்யா சொல்லி சொல்கிறார்.
போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் மகளை கொடுக்க வேண்டும் என்று தன்யாவிடம் பாக்யராஜ் கெஞ்சுகிறார்.
ஆனால் தன்யாவோ சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்வேன் என்று சொல்லிவிடுகிறார்.
பாக்யராஜ் இதனை டேனியல் பாலாஜியிடம் சொல்லி போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் கொடுக்க ஏற்பாடு செய்யச் சொல்கிறார்.
டேனியன் பாலாஜி தன்யாவை தொலைபேசியில் மிரட்டுகிறார் ஆனால் எந்த மிரட்டலுக்கும் தன்யா பயப்படாமல் போஸ்ட்மார்ட்டம் செய்து தான் கொடுப்பேன் என்று முடிவாக சொல்லிவிடுகிறார்.
இதனால் டேனியல் பாலாஜிக்கும் தன்யாவுக்கும் இடையே பகை ஏற்படுகிறது. டேனியல் பாலாஜி தன்யாவை என்ன செய்தார்? தன்யா போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் உடலை ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே பிபி180 படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : ஜேபி
தயாரிப்பு : பிரதிக் டி சாட்பேர் & அதுல் எம் போசமியா
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : ராமலிங்கம்
படத்தொகுப்பு : இளையராஜா சேகர்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

