பா. இரஞ்சித் மற்றும் T.N. அருண்பாலாஜி தயாரிப்பில், தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன், பாரி இளவழகன், ஆண்டனி, அபி ராமையா, வசந்த் மாரிமுத்து, ஜெய பெருமாள், ஆறுமுகவேல், J.P. குமார்,மாலதி அசோக் நவீன், சுஹாசினி சஞ்சீவ், அனீஷா, சாய் சரண், கருணா பிரசாத், சேகர், செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பாட்டில் ராதா.
ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் குரு சோமசுந்தரம் கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவரது மனைவியாக சஞ்சனா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
தினமும் வேலைக்கு சென்றால் மட்டுமே இவர்கள் வாழ்க்கை நடத்த முடியும் பசி இல்லாமல் வாழ முடியும் என்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் குரு சோமசுந்தரமோ குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துக் கொண்டு வருகிறார் எப்பொழுது பார்த்தாலும் குடி குடி என்று வாழ்ந்து வருகிறார்.
இதனால் வீட்டிலும் சண்டை ஏற்பட்டு நிம்மதி இல்லாமல் போகிறது. இவரின் மனைவி சஞ்சனா குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டுத் தரும் மறுவாழ்வு மையம் ஒன்றில் குரு சோமசுந்தரத்தை சேர்த்து விடுகிறார்
ஆனால் குரு சோமசுந்தரத்தால் அங்கு இருக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் அது மட்டும் இல்லாமல் அங்கு இருந்து தப்பிப்பதற்காக வழி தேடி கொண்டு ஒரு கட்டத்தில் அங்கு இருக்கும் இரண்டு நபர்களுடன் சேர்ந்து தப்பித்து விடுகிறார்.
அங்கிருந்து தப்பித்து குரு சோமசுந்தரத்தின் வாழ்க்கை என்னானது? குடியை விட்டாரா? இல்லையா? என்பதே பாட்டில் ராதா படத்தோட மீதி கதை.
குரு சோமசுந்தரம் (ராதாமணி) கதாபாத்திரத்தில் கதை முழுவதையும் தாங்கி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சஞ்சனா நடராஜன் ஒரு குடிகார கணவனின் மனைவியாக சமுதாயத்தில் தனக்கு ஏற்படும் பிரச்சனையை தன்னுடைய அழகான நடிப்பில் சிறப்பாக காட்டியுள்ளார்.
பாட்டில் ராதா படத்திற்கு ஒளிப்பதிவு ரூபேஷ் ஷாஜி செய்திருக்கிறார். ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு செய்துள்ளார் இ. சங்கத்தமிழன்.
பாட்டில் ராதா திரைப்படம் குடிகாரர்களை குடி நோயாளியாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லியுள்ள ஒரு படம்.
ரேட்டிங் 3/5