பிரிட்டிஷ் பிராண்டான மார்க் அண்ட் ஸ்பென்சர் இன்று தனது 75-வது ஆண்டுவிழாவை
கொண்டாடுகிறது. இதன் அடையாளமாக சென்னையில் ஒரு புதிய கிளையும் ஹைதராபாத்தில் ஒன்றும் இன்று திறக்கப்பட்டது. சென்னையில் வி.ஆர். மகாலில்ல் 9900 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிளையில் மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸின் சிறந்த கலெக்ஷன்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்பென்சர்ஸின் தனிச்சிறப்பான தரமான பெண்கள், ஆண்கள் ஆயத்த ஆடைகள்,
குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், முன்னணி பிராண்ட்கள் அணிவகுத்துள்ளன. இந்த திறப்பு விழா இந்தியா சர்வதேச அளவில் பிராண்ட் பொருட்களுக்கான முக்கியமான சந்தையாக இருப்பதை உணர்த்துகிறது.
இந்த புதிய கிளைகள் மூலம், மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 32
நகரங்களில் 76 கடைகளை அமைத்துள்ளது. கடந்த 48 நாட்களில் மட்டும் 6 புதிய கடைகளை மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸ் திறந்துள்ளது. புதிய கிளைகளை திறப்பதோடு மட்டுமல்லாமல் இந்திய வாடிக்கையாளர்களின் மெருகேறி வரும் ரசனைக்கேற்ப அவர்களைக் கவர பிரச்சார யுத்தியையும் கையில் எடுத்திருக்கிறது. கடந்த மாதம்
மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனம், இந்தியாவுக்கு என்றே பிரத்யேகமான பிரச்சார யுத்தியை முன்னெடுத்தது. அதற்கு ‘Rethink’ (ரீதிங்க்-மீண்டும் சிந்தியுங்கள்) என பெயரிட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரீதிங்க் பிரச்சாரத்தின் வாயிலாக மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனமானது இந்திய வாடிக்கையாளர்கள் நவீன நாகரிகம் தொடர்பான தங்களது குழப்பங்களைத் தீர்க்க உதவுகிறது.
வாடிக்கையாளர்களின் ஃபேஷன் பார்டனராக இருப்பதே இலக்கு. இதற்காகவே மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் ஸ்டைலிஸ்டுகள்
(வடிவமைப்பாளர்கள்) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸில், துணி ரகங்களின் தரம் தனிச்சிறப்பானதாக உள்ளன.
வகைவகையான டிசைன்கள் உள்ளன. சர்வதேச அளவில் லேட்டஸ்ட் ட்ரெண்ட், ஃபேஷன் எனக் கொண்டாடப்படுபவை இங்கேயும் உள்ளன.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச வடி வமைப்பாளர்களால் மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸில் கிடைக்கும் ரகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இன்று திறக்கப்பட்டுள்ள கிளைகளில் SS19 ரக ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மிடுக்கான நம்பிக்கை தரும் கோடுகள் கூடிய துணிகள், பிரிண்ட், ஃப்ளோரல், விலங்குகள் வடிவங்கள் கொண்ட நிறத்துக்கு பொருந்தும் ஆடைகள் உள்ளன. எல்லாமே ஆயத்த ஆடைகள்.
எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தும் ஆடைகள் உள்ளன. விடுமுறை நாட்கள், சாதாரண
நிகழ்வுகள், பார்ட்டி கொண்டாட்டங்கள் என எல்லா தருணங்களுக்கும் ஏற்ற ஆடைகள் உள்ளன.
உள்ளாடைகளும், தூங்கும் போது அணியக்கூடிய ஆடைகளும் வெவேறு நிறங்களில், மெலிதான டிசைன்களில் கிடைக்கின்றன. இதுதவிர சருமத்துக்கு உகந்த ஆடைகள், வாசனை திரவியங்கள், குளியல் உபகரணங்கள், மேல் பூச்சு திரவியங்களும் கிடைக்கின்றன.
மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் இந்த சீசன்
கலெக்ஷன்களைப் பார்த்து நிச்சயம் வியப்பார்கள். பெண்கள் ஆடைகள் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.599 தொடங்கி கிடைக்கிறது. ஆண்கள் ஆடைகள் ரூ.999 தொடங்கியும் குழந்தைகளுக்கான உடைகள் ரூ.499 தொடங்கியும் உள்ளாடைகள் ரூ.499 தொடங்கியும், அழகு சேர்க்கும் உபகரணங்கள் ரூ.399 தொடங்கியும் கிடைக்கின்றன.
மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனத்தில் சில்லறை விற்பனைப் பிரிவு தலைவர் மோகித் பயானா கூறும்போது, “சென்னையில் இன்று 75-வது ஆண்டு விழாவை ஒட்டி புதிய கிளையைத் திறந்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். சென்னை நகரில் எங்களுக்கான நுகர்வோர் வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. சர்வதேச தரத்திலும் ரகத்திலும் நாங்கள் பொருட்களைக் கொடுப்பதால் எங்களுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமாக சிலவற்றை வடிவமைத்திருக்கிறோம். சென்னை வாடிக்கையாளர்களை எங்களின் புதிய கிளைக்கு அன்புடன் அழைக்கிறோம்.”
பாலிவுட் நடிகை ஸ்ருதி ஹாசன் நிகழ்ச்சிக்கு மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸின் அனிமல் பிரிண்ட் (விலங்குகள் வடிவம் கொண்ட) ஆடையை அணிந்து மிடுக்காக வந்திருந்தார். நிகழ்வைப் பற்றி அவர், “மார்க் அண்ட் ஸ்பென்சர்ஸ் இந்தியாவில் தனது கிளைகளை விஸ்தரித்து வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமான பிராண்டாகஇருந்துள்ளது. காரணம் அதன் தரமும், துணிகளின் மீதான கண்கவர் அச்சுகளும், விதவிதமான வண்ணங்களும். எல்லாவற்றிற்கும் மேலாக அவை மிகச் சிறப்பாக பொருந்தும் ஃபிட்னஸ் கொண்டவையாக உள்ளன” என்றார்.