மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ், சிம்புதேவன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில், யோகி பாபு, கௌரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, ஷாரா, ஜெஸ்ஸி, லீலா, அக்ஷத் ஆகியோர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் போட்.
இரண்டாம் உலகப் போரும், இந்தியாவின் சுதந்திர போராட்டமும் நடந்து கொண்டிருக்கும் போது, ஹிட்லரின் ஆதரவு நாடாக இருந்த ஜப்பான் மெட்ராஸ் மாகாணத்தின் மீது குண்டு வீச்சு நடக்கிறது. மெட்ராஸில் கடற்கரையோரம் இருக்கும் ஆங்கிலேயர்களோட முகாமில் கைதியாக கைதியாக இருக்கும் தன்னுடைய தம்பியை காப்பாற்றுவதற்காக யோகி பாபு, தன் பாட்டி லீலாவுடன் போகிறார்.
அந்த சமயத்தில் மெட்ராஸ் கடற்கரையோமுள்ள ஆங்கிலேயர்களின் முகாமில் ஜப்பான் குண்டு வீசப்போகிறது என்ற செய்தி பரவுகிறது. இதனால் மக்கள் பயந்து கைதிகளையும் சேர்த்து அனைவரும் தப்பி செல்கின்றனர். இப்படி தப்பி செல்லும்போது யோகி பாபுவின் தம்பியை போலீஸ் மீண்டும் பிடித்துக் விடுகிறது.
யோகி பாபுவும் பாட்டி லீலாவும் தன்னுடைய ஒரு சிறிய படகில் ஏறி கடல் வழியாக தப்பிச் செல்ல முயல்கின்றனர். அப்பொழுது அவர்களுடன் பிராமணரான சின்ன ஜெயந்தும், அவருடைய மகள் கௌரி கிஷனும், வயதான நூலக ஆசிரியர் எம் எஸ் பாஸ்கரன், வட இந்திய வியாபாரியான சாம்ஸ், இஸ்லாமிய எழுத்தாளரான சாரா, நிறைமாத கர்ப்பிணியான மதுமிதா மற்றும் அவருடைய மகன் அக்ஷதும் படகில் ஏறி கொள்கின்றனர். கடலுக்கு நடுவில் சென்று விட்டால் தப்பித்து விடலாம் என்று படகை கடலுக்குள் கொண்டு போகிறார் யோகி பாபு.
அந்தப் படையில் தீவிரவாதி ஒருவரும் இருக்கிறார். நடுக்கடலில் ஒரு படகு விபத்தானதால் ஒரு வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி ஜெஸ்ஸி படகில் ஏறி கொள்கிறார்.
படகில் ஆட்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதன் எடையே தாங்க முடியாமல் படகு மூழ்கும் அபாயம் ஏற்படுகிறது. அப்பொழுது படகிலிருந்து மூன்று பேர் குதித்தால் மட்டுமே உயிர் தப்பிக்க முடியும் என்ற நிலையும் ஏற்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், இவர்கள் அனைவரும் நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது அவர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள். எந்த மூன்று பேர் கடையில் குதித்து மற்றவர்களை காப்பாற்றினார்கள் என்பதே போட் டத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இணை தயாரிப்பாளர் : சி.கலைவாணி
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : மாதேஷ் மாணிக்கம்
தயாரிப்பு வடிவமைப்பு : டி.சந்தானம்
எடிட்டர் : தினேஷ் பொன்ராஜ்
கலை இயக்குனர் : எஸ்.ஐயப்பன்
தயாரிப்பு மேற்பார்வை : வேல் கருப்பசாமி ஒப்பனை : பட்டணம் ரஷீத்
காஸ்ட்யூமர் : சாய் – சிவா
கலரிஸ்ட் : ஜி.பாலாஜி
விஎஃப்எக்ஸ் : டிடிஎம் லவன் குசன்
ஸ்டண்ட்ஸ் : சக்தி சரவணன்
ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை : எஸ்.அழகியகூத்தன் – சுரேன்.ஜி
பப்ளிசிட்டி டிசைனர் : பரணிதரன் நடராஜன்
கோ இயக்குநர்கள் : வேல்.கருப்பசாமி, பால பாண்டியன், யாத்ரா ஸ்ரீநிவாசன்
அசோசியேட் இயக்குனர் : நவீன் பா.கிருஷ், நிஷாந்த், கங்காதரன், சித்தார்த்
தயாரிப்பு நிர்வாகி : எஸ்.கிருஷ்ணராஜ்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்