தஞ்சாவூர் மருத்துவ சாலை மேம்பாலம் அருகில் உள்ள பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் திரு.சதிஷ்குமார் போன்ஸ்லே அவர்களின் முயற்சியால் சிறப்பாக நடைப்பெற்றது.
பத்மஸ்ரீ விருது பெற்ற கண் மருத்துவர் நடராஜன், மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் 150 பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்ற கண் மருத்துவர் நடராஜன் கூறுகையில், கண் பாதிப்பு பிறவி கோளாறினாலும், மாலை கண் நோயினால் தான் வருகிறது. உலகளவில் 35 மில்லியன் மக்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவர்கள் எல்லாம் கட்டாயம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், பார்வையற்ற மாணவர்களுக்கு டெலி மீடியோ மூலம் மருத்துவ சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பார்வையற்றவர்களுக்கு நவீன சிகிச்சை மூலம் பார்வை தெரியும் வகையில் அமெரிக்காவில் கண்டுபிடித்துள்ளனர். அதற்கான விலை ரூ.2 கோடியாகும். விலை அதிகமாக இருப்பதால் மத்திய அரசு தலையிட்டு அந்த மருந்தை குறைந்த விலைக்கு வாங்கி கொடுத்தால் பெரும்பாலோருக்கு பார்வை கிடைத்துவிடும் என்றார்.