பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில், எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு, பி. கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் தயாரித்திரிப்பில், கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில், ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, யோகி ஜேபி, ஷா ரா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பிளாக்.
50 வீடுகளுக்கும் மேல் வீடுகள் இருக்கும் வில்லா குடியிருப்பில் யாருமே குடிவராத நிலையில், ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் விடுமுறைக்காக அங்கிருக்கும் வீடு ஒன்றில் குடியேறுகிறார்கள்.
வீட்டுக்குள் வந்த கொஞ்ச நேரத்திலேயே அங்கிருக்கும், காவலாளி திடீரென்று காணாமல் போக, மின்சாரமும் இல்லாமல் போகிறது. ஜெனரேட்டரை ஆன் செய்வதற்காக செல்லும் ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் வெளியே வந்து
ஜெனரேட்டரை ஆன் செய்து விட்டு, மீண்டும் வீட்டுக்குள் வரும் போது, அப்போது அவர்கள் எதிர் வீட்டில் விளக்குகள் எரிகிறது. யாரும் இல்லாத வீட்டில் எப்படி விளக்குகள் எரிகிறது என்ற யோசனையோடு இருவரும் அந்த வீட்டின் அருகே சென்று பார்க்கிறார்கள்.
அவர்கள் வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் போலவே அந்த வீட்டுக்குள் இருப்பதோடு மட்டுமில்லாமல், அந்த வீட்டுக்குள் இவர்களைப் போலவே இருவர் இருக்கிறார்கள்.
இதனை பார்த்ததும், இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அதன் பிறகு பல வித மர்மங்கள் நடக்கின்றன அது என்ன என்பதை பிளாக் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு : கோகுல் பினோய்
படத்தொகுப்பு : பிலோமின் ராஜ்
கலை இயக்குநர் : சதீஷ் குமார்
சண்டைப் பயிற்சி : மெட்ரோ மகேஷ்
நடனம் : ஷெரிஃப்
பாடல்கள் : மதன் கார்க்கி
மக்கள் தொடர்பு : ஜான்சன்