பயாஸ்கோப் விமர்சனம்

சந்திர சூரியன், பிரபு & பெரியசாமி தயாரிப்பில், சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில், சங்ககிரி ராஜ்குமார், வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ் எம் மாணிக்கம், இந்திராணி, எஸ் எம் செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, மோகன பிரியா நடிப்பில் வெளிவர உள்ள படம் பயாஸ்கோப்.

ஒரு சிறிய கிராமத்தில், தனது தாத்தா, பாட்டி, சித்தப்பா, மற்றும் சொந்த பந்தங்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ராஜ்குமார். தன்னுடைய சிறிய வயதில் இருந்து சித்தப்பா மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார் ராஜ்குமார். சினிமா எடுக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை சித்தப்பாவிடம் சொல்லியதும், சித்தப்பா ராஜ்குமாரை சினிமாவில் சாதிக்க சொல்லி சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.

ராஜ்குமாரும் சென்னைக்கு வந்து சினிமாவை கற்றுக் கொள்கிறார் பிறகு படம் இயக்குவதற்காக தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஊரிலிருந்து ராஜ்குமாருக்கு தகவல் வர உடனடியாக ஊருக்கு புறப்பட்டு வந்து விடுகிறார் ராஜ்குமார்.

சித்தப்பாவிடம் ஊரில் இருக்கும் ஜோசியர் ஒருவர் இனிமேல் உனக்கு கெட்ட காலம் தான் வரப்போகிறது என்று சொல்ல அதனால் விரட்டியான சித்தப்பா தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேட்டதும் ராஜ்குமார் உடைந்து போகிறார்.

இந்த மாதிரியான மூடநம்பிக்கைகளை கலை வேண்டும் என்று நினைத்து அதற்காக படம் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் எவரும் கிடைக்காததால் தன்னுடைய சொந்த செலவிலேயே படத்தை எடுக்க முயற்சி செய்கிறார்.

தன்னுடைய கிராமத்தில் தன்னுடைய தாத்தா பாட்டி தம்பி நண்பர்கள் என இவர்களை வைத்துக்கொண்டு படத்தை எடுக்க ஆரம்பிக்கிறார் ராஜ்குமார்.

ராஜ்குமார் அந்த படத்தை எடுத்து முடித்தாரா? இல்லையா? மக்கள் வைத்துள்ள மூடநம்பிக்கையை ஒழித்தாரா? இல்லையா? என்பதே பயாஸ்கோப் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் : சங்ககிரி ராஜ்குமார்
ஒளிப்பதிவு : முரளி கணேஷ்
இசையமைப்பாளர் : தாஜ்னூர்
கலை இயக்குனர் : மார்ட்டின்
தயாரிப்பாளர் : சந்திர சூரியன், பிரபு & பெரியசாமி
டிஜிட்டல் பார்ட்னர் : ஆஹா
விநியோகம் : ProducerBazaar.com
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்