விஜய் சேகரன் இயக்கத்தில், அபிநந்தி, சரத், சுவாசிக்கா, பூனம் கவுர், வேலராமமூர்த்தி, மொட்ட ராஜேந்திரன், சங்கிலி முருகன், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் போகி.
பெண்களை ரகசிய கேமராக்கள் மூலம் படம் பிடித்து அதன் மூலம் பணத்தை சம்பாதிக்கும் நெட்வொர்க்கை ஆதாரங்களுடன் பிரிப்பதற்கான முயற்சியில் காவல்துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது.
மறுபுறம் அந்த நெட்வொர்க்கை சேர்ந்த நபர்களை தேடி கண்டுபிடித்து நாயகன் நபிநந்தியும் சரத்தும் கொலை செய்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தன்னுடைய சிறு வயதில் பிரிந்து போன தன் கிராமத்து தோழியான பூனம் கவுரை பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறார் அபிநந்தி.
பூனம் கவுரிடம் காதலை வெளிப்படுத்த முடியாமல் இருக்கிறார். ஒரு நாள் பூனம் கவுர் அபிநந்தி இருவரை கொலை செய்வதை பார்த்து விடுகிறார்.
அபிநந்தியிடம் நீ ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்கும் பொழுது தனக்கும் தன் தங்கை சுவாசிக்காவுக்கும் நடந்த விஷயங்களை பற்றி பகிருகிறார்.
அபிநந்திக்கும் சுவாசிக்காவுக்கும் என்ன நடந்தது? அந்த கும்பலால் இவர்கள் என்ன பாதிக்கப்பட்டார்கள்? என்ன என்பதே போகி படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : விஜயசேகரன் S
எடிட்டர் : சுரேஷ்
வசனம் : ST சுரேஷ்குமார்
கலை : A பழனிவேல்
சண்டை : அன்பறிவு
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ் மற்றும் சதீஷ் (AIM)
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை வைத்து கமர்சியலாக எடுக்கப்பட்டுள்ள படம் போகி.
சமூகத்திற்கு ஒரு பாடம் இந்த போகி.
ரேட்டிங் 2.5/5