பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணி

நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் நடைபெற்றது. சென்னையில் பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

“தெருவோர குழந்தைகளை பாதுகாப்பது தான் ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் தலையாய நோக்கம். தற்போது சென்னையிலுள்ள வால்டக்ஸ் ரோடில் சாலையோரம் தங்கியிருக்கும் குடும்பங்களை தயா பவுண்டேஷன் சார்பில் நாங்கள் தத்து எடுத்துள்ளோம். இனி அவர்கள் யாரும் தெருவோர வாசிகள் கிடையாது அவர்கள் அனைவரும் அபயம் குடும்பத்தார்கள்.
சாலையோர குழந்தைகள் திருடுபோவதை பற்றி பேசிய அவர், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நம்மால் எதையும் கொடுத்து அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளை மட்டும் நம்பாமல் இதை ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்புணர்வு கொண்டு குழந்தைகளை பாதுக்காக்க வேண்டும்.” என்றார்.”குழந்தைகளுக்கு தேவையான விஷயம் அன்பு, அரவனைப்பு, அதரவு மட்டுமே. இதைத் தவிர மற்ற எமோஷன்கள் அவர்களுக்கு தவறான அதிர்வை கொடுத்து விடும். பிள்ளைகள் விஷயத்தில் முதலில் பெற்றோருக்கு அக்கறை தேவை. எக்காரணத்தைக் கொண்டும் நமக்கு இருக்கும் அழுத்தத்தையோ, வருத்தத்தையோ காரணம் காட்டி குழந்தைகளின் மீது ஒரு தவறான அதிர்வை தந்துவிடக் கூடாது.” என்று கேட்டுக் கொண்டார்.  அதன் நிறுவனர் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள்.