அனுஷ்கா நடிப்பில் பாகுபலி – 2 படத்திற்கு பிறகு வெளிவந்துள்ள படம் பாகமதி. நடிகர் ஜெயராம் மத்திய அமைச்சராக மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். அவர் முதலமைச்சராக திட்டம் தீட்டுவதாக கருதி ஆளுங்கட்சி அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த சிபிஐ பயன்படுத்துகிறார்கள்.
ஜெயராமின் நெகடிவ் என்ன? அவர் ஏதேனும் ஊழல் செய்துள்ளாரா என அறிந்து கலங்கப்படுத்த அவரிடம் பர்சனல் செகரடிரியாக பத்து வருடம் பணியாற்றி கொலை குற்றத்திற்காக தற்போது சிறையில் அடைப்பட்டிற்கும் அனுஷ்காவை மீடியாவுக்கும், மக்களுக்கும் தெரியாமல் விசாரணை செய்ய முடிவு செய்கிறது சிபிஐ.
அதற்காக சிபிஐ டீம், அனுஷ்காவை ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவில் வைத்து விசாரிக்க முடிவு செய்கின்றனர். அந்த பங்களாவில் பல விதமான அமானுஷ்யங்கள் நடக்கின்றன.
அப்படி அந்த பங்களாவில் என்ன இருக்கிறது? நடக்கும் அமானுஷ்யங்களின் பின்னணி என்ன? அனுஷ்கா எதற்காக யாரை கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்? மத்திய அமைச்சர் ஜெயராமின் உண்மை முகம் என்ன? என்பதே பாகுமதி படத்தின் மீதி கதை
அனுஷ்கா ஐஏஎஸ் அதிகாரி சஞ்சலாவாகவும், பாகமதியாகவும் அசத்தியிருக்கிறார். ஹீரோவாக வரும் சக்தி சிறிது நேரமே கட்சியளித்தாலும் மனதுக்குள் பதிகிறார். வெகு நாட்களுக்கு பிறகு ஜெயராம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சிபிஐ ஆக வரும் ஆஷா சரத்தும் போலிஸ் அதிகாரியாக வரும் முரளி ஷர்மாவும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்