பல தடைகளை தாண்டி வெளியாகும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

நடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது!
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி  நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால்  நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். Bஇந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.
‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.’பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மே 11  முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.
சென்னையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி, சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் முருகன் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணன்  பேசியவை ‘ திருச்சி பரதன் பிலிம்ஸ்  உரிமையாளர் திரு விஸ்வநாதன் அவர்கள் ஒரு முதுகெலும்பாக இந்த படத்திற்கு உறுதுணையாக நின்று, இவளவு தடைகளையும் தாண்டி தற்போது மே 11 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. நடிகர் அரவிந்த் சாமி மாதிரி நடிகர்கள் இருந்தால் போதும் தயாரிப்பாளர் முருகன் போன்றோர்களுக்கு மிக பெரிய பலமாக இருக்கும். அரவிந்த் சாமி அவர்களுக்கும், திரு விஸ்வநாதன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் கண்ணா பேசியவை ” அரவிந்த்சாமி அவர்கள் எங்களுக்குகவும் இந்த படத்திற்க்காகவும் நிறைய விட்டு கொடுத்து இருக்கிறார். முன்பணம் வாங்கவில்லை. உண்மையிலேயே அவரை பாராட்ட வேண்டும். படம் பல தடைகளை தாண்டி வெளிவருகிறது. படத்தில் உள்ள அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கண்டிப்பா இந்த படம் மாபெரும் வெற்றியடையும்.” என அவர் பேசி உள்ளார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் திரு அரவிந்த்சாமி பேசியவை ‘ அனைவரும் பேசியதுபோல படம் பல தடைகளை தாண்டி வெளியாக இருக்கிறது. படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த முருகன் அவர்களுக்கு நன்றி, படத்தில் ரமேஷ் கண்ணா வசனம் அருமையாக எழுதியுள்ளார். சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா அருமையான நகைச்சுவை காட்சிகளை கொடுத்துளள்னர். நைனிகா, ராகவன் இரண்டு பேருமே முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து உள்ளனர். அமலா பால் ரொம்பவே நன்றாக நடித்துள்ளார். அம்ரேஷ் இசை, சித்திக் இயக்கம் எல்லாமே அருமையாக இருக்கிறது. விஜயன் அவர்களுடைய 500 வைத்து படம்தி இது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன். இப்படம் மே 11 ரிலீஸ் ஆகிறது, கண்டிப்பாக வெற்றியடையும்” இவ்வாறு பேசியுள்ளார்.
இந்தப்படம் தமிழகமெங்கும் வெளியாக காரணமாக இருக்கும் பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் அரவிந்த்சாமி மிகப்பெரிய உதவியாக இருந்தார். இயக்குனர் சித்திக் அவர்களுக்கும், படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். பல தடைகளை தண்டி மே 11 ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு தயிரைப்பலர் முருகன் நன்றியுரை ஆற்றினார்.
தொழில் நுட்பக்குழு :
இயக்கம்                                 : சித்திக்
இசை                                        : அம்ரேஷ்
ஒளிப்பதிவு                            : விஜய் உலகநாதன்
எடிட்டிங்                                  : கே.ஆர்.கௌரி சங்கர்
புரொடக்ஷன் டிசைன்        : மணி சுசித்ரா
ஆர்ட்                                        : ஜோசப் நெல்லிகன்
சண்டை பயிற்சி                   : பெப்சி விஜயன்
நடனம்                                     : பிருந்தா
நிர்வாக தயாரிப்பு                  : விமல்.ஜி
தயாரிப்பு                                  : எம்.ஹர்சினி