RV பல்கலைக்கழகத்தில் (RVU) சட்டப் பள்ளிக்கு இந்திய பார் கவுன்சில் (BCI) அங்கீகாரம் அளித்துள்ளது
RVU அதன் தலைமை அதிகாரியாக (டீன்)
பேராசிரியர் Y.S.R மூர்த்தியை நியமித்துள்ளது
UG மற்றும் PG சட்ட வகுப்புகள் ஆகஸ்ட் 2023 முதல் தொடங்கும்
இன்ஸ்டிடியூட் மெரிட் ஸ்காலர்ஷிப்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்
Chennai, 10 July 2023: சட்டக் கல்வியின் கட்டுப்பாட்டாளரான, இந்திய பார் கவுன்சில் RV பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளி மற்றும் அதன் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ. எல்.எல்.பி. மற்றும் பி.பி.ஏ. எல்.எல்.பி. போன்ற கல்வி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்கூல் ஆஃப் லா (SoL) பட்டப்படிப்பு திட்டங்கள் ஆகஸ்ட் 2023 முதல் தொடங்கும், மேலும் இது RVU-ன் கீழ் வரக்கூடிய ஆறாவது பள்ளியாக இருக்கும்.
சட்டப் பள்ளியின் டீன் மற்றும் RVU துணைவேந்தர், பேராசிரியர் Y.S.R. மூர்த்தி இது பற்றி கூறுகையில், “RVU-வில் சட்டப் பள்ளியைத் தொடங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், இது தற்போதுள்ள ஐந்து பள்ளிகளுடன் சேர்ந்து, ஒருங்கிணைந்து எங்கள் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது. சட்டப் பள்ளியின் மூலம், நீதி, ஒருமைப்பாடு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் கொள்கைகளை நிலைநிறுத்தும் எதிர்கால வழக்கறிஞர்களை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். எங்கள் மாணவர்கள் வணிகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கொள்கை ஆகியவற்றுடன் சட்டத்தை ஆழமாக கற்றுக்கொள்வதற்கான தனித்துவமான வாய்ப்பைப் பெறுவார்கள்.
மேலும் அவர் “எங்கள் சட்ட மாணவர்கள் உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க நிறுவனங்களில் இருந்து வரக்கூடிய தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்களால் வழிநடத்தப்பட்டு ஊக்கத்தோடு கற்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். கார்ப்பரேட் மற்றும் சட்ட நிறுவனங்கள், தொழில் பங்குதாரர்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், மதியுரையகம் (think-tanks) மற்றும் என்.ஜி.ஓக்களுடன் நுட்பமாக இணைந்து, அதன் மூலம் எங்கள் மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற கற்றலுக்கான வாய்ப்புகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று கூறினார்.
RVU வேந்தர், டாக்டர் (h.c.) A.V.S. மூர்த்தி, BCI-ன் அங்கீகாரத்தை வரவேற்று பேசுகையில், “கல்வியின் சிறப்பையும் மதிப்பையும் உறுதி செய்வதற்காக, இந்தியா மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற ஆய்வுக் குழுவைக் கூட்டியுள்ளோம். அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், எங்கள் பாடத்திட்டம் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அவை எங்கள் பட்டதாரிகளை விரைவாக வளர்ச்சி பெறும் சட்ட வெளியில், சிறந்து விளங்கத் தேவையான திறன்களுடன் தயார் படுத்துவதற்கு பல்துறையை உள்ளடக்கியது. ரூபாய் 1 கோடி மதிப்பிலான 75 மெரிட் ஸ்காலர்ஷிப்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது திறமைகளை வளர்ப்பதிலும் சிறந்த சாதனைகளை அங்கீகரிப்பதிலும் எங்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாக விளங்குகிறது.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மற்றும் கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு. ஜஸ்டிஸ் பி.என் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் இந்திய குற்றவியல் மற்றும் விக்டிமாலஜியின் தந்தை மற்றும் உலக விக்டிமாலஜி சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர், சட்டப் பள்ளியின் எமரிட்டஸ் பேராசிரியர், பேராசிரியர் (டாக்டர்) கே. சொக்கலிங்கம். ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல், NLSIU, WBNUJS, RGNUL, லண்டன் பல்கலைக்கழகம், எமோரி பல்கலைக்கழகம், பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் இருந்து ஃபுல்பிரைட், பிரிட்டிஷ் செவனிங், ஈராஸ்மஸ் முண்டஸ் ஸ்காலர்ஷிப், சர் ரத்தன் டாடா போஸ்ட்-டாக்டோரல் பெல்லோஷிப் போன்ற ஆசிரியப் பட்டம் பெற்ற அறிஞர்கள் அடங்குவர். வார்விக், SOAS, ஜெனீவா அகாடமி மற்றும் மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகம், புகழ்பெற்ற சட்டப் பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள். அனுபவமிக்க கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விமர்சன சிந்தனை, ஆராய்ச்சித் திறன் மற்றும் நடைமுறைச் சட்டத் திறன்களை வளர்க்கும் ஆற்றல்மிக்க கற்பதற்கான சூழலை மாணவர்கள் கிடைக்கப்பெறுவார்கள்.
RVU இன் ஸ்கூல் ஆஃப் லா, சட்டத் துறையில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் நெறிமுறை மதிப்புகளுடன் மாணவர்களைச் தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை வழங்கும். மாணவர்கள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ. எல்.எல்.பி. (Hons) அல்லது பி.பி.ஏ. எல்.எல்.பி. (Hons.), LL.M மற்றும் Ph.D. போன்றவற்றில் பதிவு செய்யலாம். இளங்கலை, முதுகலை மற்றும் முழுநேர/ பகுதி நேர Ph.D.-க்கான சேர்க்கை திட்டங்கள் ஏற்கனவே நடந்து வருகின்றன. விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் – https://admissions.rvu.edu.in/. UG திட்டத்திற்கான சேர்க்கை RVSAT நுழைவுத் தேர்வு / செல்லுபடியாக்கூடிய CLAT/LSAT/CUET மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டது. RVU ஸ்கூல் ஆஃப் லா 25% முதல் 100% வரையிலான 75 மெரிட் ஸ்காலர்ஷிப்களை முதல் ஆண்டிலேயே தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.