பல்டி விமர்சனம்

உன்னி சிவலிங்கம் இயக்கத்தில், ஷேன் நிகாம், சாந்தனு பாக்யராஜ், செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பல்டி. 

ஷேன் நிகாம், சாந்தனு மற்றும் அவருடன் இரண்டு நண்பர்கள் கபடி வீரர்களாக இருக்கின்றனர். நான்கு பேரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். அங்கு நடக்கும் எல்லா கபடி போட்டிகளிலும் வெற்றி பெற்று பரிசுகளை வெல்கின்றனர். 

 

கந்து வட்டியில் மிகப்பெரிய செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், கௌரி என்ற பெண்ணும் இருந்து வருகிறார்கள். 

 

மக்களிடம் வட்டிக்கு பணத்தை கொடுத்து, மீட்டர் வட்டி, ஜம்போ வட்டி என்று பலவித வட்டிகளில் பணத்தை வசூல் செய்கிறார்கள். பணம் கொடுக்க முடியாதவர்களை அவமானப்படுத்துகிறார்கள் அசிங்கப்படுத்துகிறார்கள். 

 

இப்படி போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில், செல்வராகவன் தனியாக ஒரு வங்கி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 

 

செல்வராகவனின் கபடி டீம் தோல்வியடைந்த நிலையில், வெற்றி பெற்ற சாந்தனு, ஷேன் நிகாம் மற்றும் அவருடைய நண்பர்களை தன்னுடைய டீமுக்கு விளையாடுவதற்கு அதிக பணம் கொடுத்து அழைக்கிறார். 

 

பணத்திற்காக ஆசைப்பட்டு சாந்தனு மற்றும் நண்பர்களும் சரி என்று சொல்லிவிட்டு கபடி ஆட ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக அல்போன்ஸ் புத்திரன் டீம் விளையாடுகிறது. 

 

இதனால் அல்போன்ஸ் புத்திரனின் பகைக்கு சேம் நிகாம் சாந்தனு மற்றும் நண்பர்கள் உள்ளாகிறார்கள். 

 

செல்வராகவன் இவர்களை பயன்படுத்தி தன்னுடைய தொழிலை அதிகரிக்க திட்டம் போடுகிறார். 

 

சாதாரண கபடி வீரர்களாக சந்தோஷமாக இருந்த இவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சந்தித்தார்கள்? அதிலிருந்து மீண்டார்களா? இல்லையா? என்பதை பல்டி படத்தோட மீதிக்கதை.

 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

 

தயாரிப்பு : சந்தோஷ் டி குருவிலா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் 

இயக்கம் : உன்னி சிவலிங்கம் 

ஒளிப்பதிவு : அலெக்ஸ் புலிக்கல்

இசை : சாய் அபயங்கர் 

மக்கள் தொடர்பு : யுவராஜ்