“பகாசூரன்” பட இயக்குனர் மோகன். G க்கு 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் கௌதம்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கிய ” பகாசூரன் ” படம் கடந்த பிப்ரவரி 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் அவர்கள் இயக்குனர் மோகன் G க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கியதோடு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இவர்களுடன் நடிகர் ரிஷி ரிச்சர்ட் அவர்களுடன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.