எஸ்தெல் எண்டர்டெயினர் சார்பில் டாக்டர். எஸ். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஜயகுமார் இயக்கத்தில், பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி, இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் விஜய் சேதுபதி என பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அழகிய கண்ணே”
நாயகன் இன்பாவுக்கு (லியோ சிவகுமார்) சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர் நாடகம் எழுதுவது, ஊரில் புரட்சி நாடகங்கள் நடத்துவது என்று இருக்கிறார். அவர் எதிர் வீட்டில் இருக்கும் கஸ்தூரிக்கு (சஞ்சிதா ஷெட்டி), கல்லூரி விழாவில் நாடகம் நடத்த இன்பா உதவி செய்ய அவர் மீது கஸ்தூரிக்கு காதல் வருகிறது. இருவரும் வேறு வேசமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு இன்பா வீட்டில் ஓகே சொல்கிறார்கள். அதே சமயம் கஸ்தூரியின் தந்தையும் மகளின் காதலுக்கு ஓகே சொல்கிறார். ஆனால் கஸ்தூரியின் சித்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார். சித்தியின் எதிர்ப்பையும் தாண்டி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இயக்குநர் பிரபு சாலமனிடம் பணிபுரிய இன்பாவுக்கு வாய்ப்பு கிடைத்ததால், கஸ்தூரி ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதால், இருவரும் சென்னையிலேயே வாழ முடிவு செய்கிறார்கள். குழந்தையும் பிறக்கிறது. இந்நிலையில், கஸ்தூரியின் மாமன் (சித்தியின் தம்பி) இன்பாவை பழி வாங்க முடிவு செய்கிறார். கஸ்தூரி மாமன் ஏன் பழிவாங்க நினைக்கிறார்? இன்பா இயக்குநர் ஆனாரா? இல்லையா? விஜய் சேதுபதி எவ்வாறு உதவி செய்தார்? என்பதே அழகிய கண்ணே படத்தோட மீதி கதை