அய்யனார் வீதி – சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் இரண்டு குடும்பத்துக்குள் நடக்கும் பகை, அதையொட்டி நடக்கும் பிரச்சினையையே இப்படத்தின் கதை. அய்யனார் வீதியில் வசிக்கும் பொன்வண்ணனும், பாக்யராஜும் பால்ய கால நண்பர்கள். பொன்வண்ணன் அந்த ஊரில் சாமியாடியாக இருக்கிறார். பாக்யராஜ் கோவில் பூசாரியாக இருந்துவருகிறார். பாக்யராஜின் பெண்ணான சாரா ஷெட்டி கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் நாயகன் யுவனும் படித்து வருகிறார். யுவனின் தாத்தா செய்த தவறுக்காக அவருடைய குடும்பத்தையே பொன்வண்ணனின் அப்பா ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்.

இதனால், காலங்காலமாக அவர்கள் ஊரைவிட்டு ஒதுங்கியே இருக்கிறார்கள். இதனால், பொன்வண்ணன், பாக்யராஜ் மற்றும் ஊர்க்காரர்கள் மீது வெறுப்பில் இருக்கும் யுவனுடைய குடும்பத்தார் ஊர்க்காரர்களை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  மறுமுனையில், யுவன், சாராஷெட்டியை ஒருதலையாக காதலித்து வருகிறார். சாராவோ யுவனை கண்டுகொள்வதாக இல்லை. அதேநேரத்தில், பொன்வண்ணனின் மகளான சிஞ்சு மோகன் யுவனின் மீது ஆசையாக இருக்கிறாள்.

இந்நிலையில், அய்யனார் வீதியில் ஊர் திருவிழா நடக்கவிருக்கிறது. அந்த திருவிழாவில் கள்ளச்சாராயத்தை கொடுத்து ஊர் மக்கள் அனைவரையும் கொல்ல யுவனின் சித்தப்பா மற்றும் பெரியப்பா ஆகியோர் திட்டம் போடுகிறார்கள்.  இந்த திட்டம் ஊர் மக்களுக்கு தெரிய வந்ததா? யுவன் குடும்பத்தாரிடமிருந்து ஊர் மக்கள் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்