நடிகர் அதர்வா முரளி, தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாகவும், பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிட்ட அளவிலான வெற்றியை தொடர்ந்து தருவதில், நிலையானவராகவும் வலம் வருகிறார். வணிக வாட்டாரங்கள் விரும்பும் வகையிலான அம்சங்கள் கொண்ட படங்களிலும், அதே நேரம் திரை ஆர்வலர்கள் விரும்பும் வகையிலான அழுத்தமான கதைகளை கொண்ட படங்களையும் சமன்படுத்தும் வகையில் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து, அனைவரையும் ஆச்சர்யபடுத்தி வருகிறார். புதிய வரவுகளான தமிழின் இளம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அவர் தரும் ஒத்துழைப்பு, அவருக்கு திரைத்துறையில் மிக நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. அந்தவகையில் அனைவரை ஈர்க்கும்படி, நடிகர் அதர்வா அடுத்ததாக, பிரபல இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நிறங்கள் மூன்று’ என்ற தலைப்பில், ஒரு தனித்துவமான கதைக்கருவில் உருவாகும் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் ரகுமானுடன், அதர்வா முரளி முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
படம் குறித்து Ayngaran International சார்பில் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி கூறியதாவது…
“நிறங்கள் மூன்று” போன்றதொரு அழகான பாத்திரங்களும், மிகச்சிறந்த திரைக்கதையும் கொண்ட அட்டாகசமான படத்தை தயாரிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். Ayngaran International நிறுவனம் 35 வருடத்தில் கால் பதிக்கிறது. இது எங்கள் நிறுவனத்தின் 25வது படைப்பாகும் எனவே பெருமைப்படுமளவிலான ஒரு அற்புதமான திரைப்படத்தை உருவாக்க நினைத்தேன். “நிறங்கள் மூன்று” மூலம் அது நிறைவேறியுள்ளது கார்த்திக் நரேன் திரைக்கதையை விவரித்தபோது, இந்தக் கதையின் கதாபாத்திரங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர் கதை சொல்லிக்கொண்டிருகும்பொதே, இந்த பாத்திரங்களுக்கு யார் பொருத்தமானவர் என்று யோசிக்க ஆரம்பித்து, பல நடிகர்கள் பெயர் என் மனதில் ஓட ஆரம்பித்தது. நான் நினைத்த நடிகர்களின் பெயரையே கார்த்திக் நரேனும் சொன்னது மிகவும் ஆச்சரியமான தருணம். அதர்வா முரளி, சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகியோர் சிறந்த நடிகர்கள், அவர்கள் எப்போதும் அழுத்தமிகுந்த கதைகளிலும், வணிக ரீதியில் லாபம் தரும் படைப்புகளிலும் தங்கள் திறனை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறார்கள். இப்படத்தில் கார்த்திக் நரேன் தனது திறமையான இயக்கத்தால், இந்த கலைஞர்களின் திறமையை, அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார். தனது முதல் அறிமுக திரைப்படமான ‘துருவங்கள் பதினாறு’ மூலம் மொத்த திரையுலகிலும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் மீது எனக்கு எப்போதும் ஒரு பிரமிப்பு உண்டு. குறுகிய காலத்தில், திரைத்துறையில் பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரிந்து, அவர் தனது மகத்தான திறமையை நிரூபித்துள்ளார். “நிறங்கள் மூன்று” தனது இயக்குநர் கார்த்திக் நரேனின் அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
“நிறங்கள் மூன்று” தலைப்பின் அர்த்தம் குறித்து கேட்டபோது..
இப்போதே தலைப்பை பற்றி கூறுவது அத்தனை நன்றாக இருக்காது, ஆனால் படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் என்பதற்கு நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது ஒரு ஹைப்பர்லிங்க்-டிராமா-த்ரில்லர்
நிறங்கள் மூன்று திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த புதன் கிழமை 5.1.2022 இனிதே துவங்கும் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் 2022 மார்ச் மாதம் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. Ayngaran International 2500 க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களை உலகம் முழுக்க விநியோகம் செய்துள்ளது. மொத்த தமிழ் திரைத்துறையிலும் இது ஒரு மிகப்பெரும் சாதனையாகும்.
தொழில்நுட்பக் குழுவில் ஜேக்ஸ் பிஜோய் (இசை), டிஜோ டாமி (ஒளிப்பதிவு), ஸ்ரீஜித் சாரங் (எடிட்டிங்-டிஐ), சிவசங்கர் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), டான் அசோக் (ஸ்டண்ட்ஸ்), அசோக் குமார் (ஆடை வடிவமைப்பாளர்), சச்சின் சுதாகரன்-Sync Cinema ஹரிஹரன் (ஒலி வடிவமைப்பு), சுரேஷ் சந்திரா-டைமண்ட் பாபு, ரேகா (மக்கள் தொடர்பு), சுந்தர்ராஜன் K (நிர்வாகத் தயாரிப்பாளர்), கார்த்திக் சீனிவாசன்-சுரேஷ் (ஸ்டில்ஸ்) மற்றும் கபிலன் செல்லையா (டிசைன்ஸ்) ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.