பாலியல் வண்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிப்பதோடு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பெண்ணியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி பாலியல் வல்லுரவு செய்து துன்புறுத்தப்பட்டுள்ள நிகழ்வை கண்டித்து சென்னையில் பெண்ணியல் ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பெண்ணியல் ஆர்வலரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான அப்சாரா அவர்கள், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். பெண்குழந்தைகளுக்கு உடன் பழகுவோர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்தே கற்றுத்தருவது அவசியமான ஒன்று என்று கூறினார். அதிலும் பிறரிடம் பழகும்போது தொட்டுபேசுவது பேசுவது குறித்த முழுமையான புரிதலை பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலக்கட்டத்தில் அவசியமாகியுள்ளது என்றார்.
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய நினைப்போருக்கு ஒருவித அச்ச உணர்வை இது போன்ற தண்டனைகள் நினைவுப்படுத்தும் என்றார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் கமலா செல்வராஜ், பெண் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொட நினைத்தால் மரண தண்டனை நிச்சயம் என்பது நினைவுக்கு வரவேண்டும் என்றார். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைப்பதென்பது தேவையற்ற நிர்வாக செலவுகள் என்றும் டாக்டர் கமலா செல்வராஜ் குறிப்பிட்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மன நல ஆலோசகர் வசந்தி பாபு, நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமன், சாக்ஸ் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.