“தீர்ப்புகள் விற்கப்படும்” படத்தை பார்க்கும் ரசிகர்கள், திரையரங்குகளிலிருந்து வெளியேறும்போது, ஒரு அழுத்தமான நல்ல திரைப்படம் பார்த்த திருப்தியுடன் இருப்பார்கள் – நடிகர் சத்யராஜ்

திரைத்துறையில் தன் நீண்ட பயணத்தில், தனது அற்புதமான நடிப்பின் மூலம், நம் இதயங்களை கொள்ளையடித்தவர்  நடிகர் சத்யராஜ். எதிர் நாயகனாக அதிரடி ஆக்சன் செய்வதிலும், காமெடியை  மையமாகக்  கொண்ட  கதாநாயகனாக, திரைப்படத்தின் இறுதிவரை ரசிகர்களை மகிழ்விப்பதிலும், அவர் தனது மேஜிக்கில், லட்சக்கணக்கில் ரசிகர்களை  மயக்கியுள்ளார். டிசம்பர் 31, 2021 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள அவரின் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படத்தில் மாறுபட்ட உறுதி மிக்க நாயகனாக , கதாப்பாத்திரத்துடன் பொருந்தியவராக ஆச்சர்யமளிக்கிறார்.

இது குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது…
‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் திரைக்கதையை தீரன் சொன்னபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் அதே சமயம் படம் பற்றி மிகவும் கவலையாகவும் உணர்ந்தேன். இதன் திரைக்கதை நிச்சயமாக மிகுந்த ஆச்சரியமாக தந்தது, எனது கதாபாத்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது, கதை கேட்டவுடனே உடனடியாக படப்பிடிப்பிற்கு செல்ல தோன்றியது, ஆனால் இன்னொரு வகையில், தற்போதைய சமூகப் பிரச்சினையைக் நேரடியாக கையாளும் அழுத்தமான கருப்பொருளைக் இந்தப்படம் கொண்டிருப்பதும், மேலும் படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கு தவிர்க்க முடியாத சுமையை உருவாக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. இருப்பினும், இயக்குனர் தீரன் மிக அழகாக இப்படத்தை கையாண்டு,  இப்போது திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார். நேர்மைமிக்க மற்றும் அப்பாவி மக்களுக்கு ஆதரவாக சட்டம் ஒழுங்கு சரியாக செயல்பட்டால், ஒரு சாமானியன் சட்டத்தைக் கையில் எடுப்பது எப்போதும் அவசியமில்லை என்பதை, வலுவாக நியாயப்படுத்தும் சமூகத்திற்கு பொருத்தமான தலைப்பைக் கையாள்கிறது இந்தப் படம். ஆனால் அதே  நேரத்தில், இந்த படம் வன்முறையைத் தூண்டாது. திரையரங்கில் படத்தை பார்த்த பிறகு, இந்த படத்தின் தலைப்பிற்கான மதிப்பை ரசிகர்கள் கண்டிப்பாக உணருவார்கள் என்று நினைக்கிறேன். இயக்குநர் தீரனின் துணிச்சலான பார்வையையும் யோசனையையும் ஊக்குவித்து, இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் C.R.சலீம் அவர்களுக்கு நன்றி. படத்தின் குழுவில் பணியாற்றிய ஒவ்வொரு உறுப்பினரும் முழு மனதுடன் இப்படத்திற்காக அவர்களை அர்ப்பணித்துள்ளனர், படத்தின்  இறுதிப்பதிப்பில் அது தெளிவாகத் தெரிகிறது. நாயகி ஸ்மிருதி வெங்கட் உடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக, அவர் நிறைய பாராட்டுகளைப் பெறுவார். இந்தப் படத்தைப் பார்த்து பார்வையாளர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள், இந்தப் படம் பார்த்த பிறகு,  ஆழமான தாக்கத்துடன்  அவர்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுவார்கள் என்று என்னால் உறுதியாக கூற  முடியும் என்றார்.

தீரன் எழுதி இயக்கிய, சத்யராஜ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் முக்கிய வேடங்களில் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தை அல்-தாரி மூவீஸ் C.R. சலீம் தயாரித்துள்ளார்.  11:11 புரொடக்சன்ஸ்  டாக்டர் பிரபு திலக் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

இப்படத்திற்கு கருடவேகா அஞ்சி ஒளிப்பதிவு செய்துள்ளார்,  பிரசாத் S.N. இசையமைத்துள்ளார். மோகன் ராஜன் மற்றும் ஸ்ரீகாந்த் வரதன் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். நௌஃபல் அப்துல்லா (எடிட்டர்), தினேஷ் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), C.S. பாலசந்தர் (கலை), S.N. அஸ்ரஃப் (தயாரிப்பு நிர்வாகி), முகமது சுபேர் (ஆடை வடிவமைப்பாளர்), பிளஸ்சன் (வடிவமைப்பு), மற்றும் ராமகிருஷ்ணா – Four Frames (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.