• அதுல்யா 98 வயதான சமுக செயற்பாட்டாளர் காமாட்சி சுப்பிரமணியன் (காமாட்சி பாட்டி) சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான தனது பங்களிப்பை அங்கீகரிப்பதன் மூலம் பாராட்டப்பட்டார்
• 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுமார் ஒரு டன் கழிவுகள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.
2025 ஜனவரி 25, சென்னை– 2025-ம் ஆண்டிற்கான தேசிய தூய்மை தினம் ஜனவரி 30-ம் தேதி நாடெங்கிலும் அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில் மூத்தகுடிமக்களுக்கான வாழ்விட பராமரிப்பு துறையில் முதன்மை வகிக்கும் அதுல்யா சீனியர் கேர், அதன் முதன்மை முன்னெடுப்பு முயற்சியான #CaringForASenior என்பதன் கீழ், சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், சமூக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் கடற்கரையை தூய்மையாக்கும் நிகழ்வை நேர்த்தியாக ஏற்பாடு செய்து நடத்தியது. அர்பேசர் சுமித் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க் ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட இந்த முன்னெடுப்பான நடவடிக்கை சுற்றுச்சூழல் நிலைப்புத்தன்மை மீது அதுல்யாவின் பொறுப்பு மற்றும் வாக்குறுதியும் ஒரு அங்கமாக அமைகிறது. மூத்தகுடிமக்களது நலவாழ்விற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அதுல்யாவின் சமூக பொறுப்புக்கும் இது எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
சுற்றுச்சூழல் மீதான அக்கறை மற்றும் மூத்தக்குடிமக்களது நலவாழ்வு ஆகிய இரண்டின் மீதும் உறுதியான கூர்நோக்கத்தோடு செயல்படும் அதுல்யாவின் இந்த தூய்மையாக்கல் நிகழ்வில் 200-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். தேசிய தூய்மை தினத்திற்கு முன்னோடியாக நடத்தப்பட்ட இச்சேவை நிகழ்வில் அதுல்யாவின் அர்ப்பணிப்புமிக்க பணியாளர்கள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டு சென்னையின் புகழ்பெற்ற பெசண்ட் நகர் கடற்கரையை தூய்மையாக்கும் பணியில் ஒருங்கிணைந்து ஈடுபட்டனர். இரண்டு மணி நேரங்களுக்கு சிறிதும் சோர்வின்றி உற்சாகமாக பணியாற்றிய தன்னார்வலர்கள், கடற்கரை எங்கும் சிதறிக் கிடந்த குப்பைகளையும், கழிவுப்பொருட்களையும் கணிசமான அளவு அகற்றி இந்த அழகான கடற்கரையை தூய்மையாக்கி சமூகத்தினர் மகிழ்ச்சியோடு வந்து செல்லும் அமைவிடமாக மாற்றியிருக்கின்றனர்.
அனைத்து தலைமுறையினருக்கும் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதுல்யாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான திரு. G ஶ்ரீனிவாசன், “நமது மூத்தகுடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழல் என்பது ஒரு அடிப்படையான அம்சம் என்று அதுல்யாவில் நாங்கள் நம்புகிறோம். #CaringForASenior என்ற எமது முதன்மை முன்னெடுப்பு திட்டத்தின் வழியாக முதியவர்களுக்கு மரியாதை மற்றும் கனிவான அக்கறை என்ற கலாச்சாரத்தை சமூகத்தினர் மத்தியில் ஊக்குவிப்பது எமது நோக்கமாகும்; அதே வேளையில் நிலைப்புத்தன்மையையும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உணர்வையும் நாங்கள் முன்னிலைப்படுத்தி ஊக்குவிக்கிறோம். பல்வேறு அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பும் சமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுவதும் அர்த்தமுள்ள மாற்றத்திற்கு எப்படி வழிவகுக்கிறது என்பதற்கு கடற்கரையை தூய்மையாக்கும் இச்செயல்பாடு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாகும்” என்று கூறினார்.
#CaringForASenior செயல்திட்டத்தினால் அதிகரித்து வரும் தாக்கத்தையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது. முதியோர் பராமரிப்பு அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் தன்மை மற்றும் சமூக ஈடுபாடு என்பது தொடர்பாக சமூக அளவில் முக்கியமான விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் உருவாக்குவதற்கான செயல்ஊக்கியாக இச்செயல்திட்டம் வளர்ந்திருக்கிறது. கோயில்களுக்கு சிரமமின்றி சென்று வரும் வசதியை மேம்படுத்துவது, மகிழ்ச்சியான வயது முதிர்வை ஊக்குவிக்க வாக்கத்தான் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, மூத்தகுடிமக்களுக்கு தோழமையான அவசரநிலை சிகிச்சையை வழங்க காவல் கரங்கள் அமைப்பிற்கு அவசரநிலை சிகிச்சை ஊர்திகளை அன்பளிப்பாக வழங்கியது உட்பட மூத்தகுடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களை அதுல்யா மேற்கொண்டு வருகிறது.
தேசிய தூய்மை தினத்தை நினைவூட்டும் ஒரு முயற்சியாக நடத்தப்பட்ட கடற்கரை தூய்மையாக்கல் நடவடிக்கையானது, சுற்றுச்சூழல் மீதும், மூத்தகுடிமக்களின் வாழ்க்கை மீதும் பார்வைக்கு புலப்படக்கூடிய தாக்கத்தை கூட்டுமுயற்சிகள் எப்படி உருவாக்க முடியும் என்பதற்கான செயல்முறை விளக்கமாகவும் ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்திருக்கிறது. இதுபோன்ற சீரிய முயற்சிகளின் மூலம் முதியோருக்கான பராமரிப்பானது சமூக பிரச்சனைகளோடு இணைந்து செயல்படும் விதத்தை அதுல்யா மறுவரையறை செய்கிறது. முதியோருக்கான பராமரிப்பு என்பது உதவப்படும் வாழ்விட வசதிகளின் சுவர்களையும் கடந்து நீள்கிறது என்பதை இது தெளிவாக்குகிறது.
நேர்மறை மாற்றத்தையும், தூய்மையான மற்றும் பசுமையான மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சமூக ஒருங்கிணைப்பையும் முன்னெடுப்பதற்கு சமூகத்தினரின் ஆர்வமிக்க பங்கேற்பாளர்கள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஆற்றலை எடுத்துக்கூறுவதாக தேசிய தூய்மை தினம் 2025-க்கு முந்தைய இந்த நிகழ்வு இருக்கிறது.
தென்னிந்தியாவில் மூத்தகுடிமக்களுக்கு உதவப்படும் வாழ்விட சேவைகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக அதுல்யா சீனியர் கேர் செயலாற்றுகிறது; சௌகரியமான மற்றும் கண்ணியமான சூழலில் கனிவான பராமரிப்பையும், ஆதரவையும் வழங்கும் சேவையில் தன்னை அதுல்யா அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. இதன், #CaringForASenior முன்னெடுப்பின் வழியாக முதியோர்களுக்கு வாழ்க்கையின் தரத்தை மறுவரையறை செய்யும் அதுல்யா, சுகாதாரம், நலவாழ்வு மற்றும் சமூக பராமரிப்பு ஆகியவற்றில் சமூக மாற்றத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.