கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் அசுரன்.. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்
இவர்களுடன் அம்மா அபிராமி ,டிஜே அருணாச்சலம், பாலாஜி சக்திவேல் ,பிரகாஷ்ராஜ் ,கென் கருணாஸ் ,பசுபதி ,சுப்ரமணியசிவா ,பவன் ஆடுகளம் நரேன் ,நித்திஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர் .
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .ராமர் படத்தொகுப்பினை கையாண்டுள்ளார், கலை இயக்கம் ஜாக்கி , சன்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன் ,
இப்படம் தணிக்கையில் U/A சான்றிதழை பெற்றுள்ளது .அக்டோபர் 4ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது.


