பெஸ்ட் மூவீஸ் சார்பில், தன சண்முகமணி தயாரிப்பில், அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில், ஷாம், நிரா, அறிமுக நடிகர் ரஞ்சித், வெண்பா, நிழல்கள் ரவி, அருள் சங்கர், ஜீவா ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’அஸ்திரம்’
ஷாம் கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறார். ஷாமின் மனைவியாக வரும் நாயகி நிரா பத்திரிகையாளராக வேலை செய்கிறார்.
இருவருக்கும் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். ஷாம் செயின் பறிப்பு திருடனை பிடிக்கப் போகும் போது, துப்பாக்கியால் யாரோ ஒருவர் சுட அது ஷாமின் தோள்பட்டையில் படுகிறது இதனால் வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பல்வேறு ஊர்களில் மூன்று பேர் வயிற்றில் கத்தியால் குத்தி கிழித்து கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற செய்தியை அறிகிறார் ஷ்யாம். இந்த தற்கொலைகளின் பின்னணியில் மர்மம் ஏதோ இருக்கிறது என்பதை அறிந்து அந்த வழக்கை தான் விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஷியாம்.
ஷியாமின் இந்த விருப்பத்தை காவல்துறை உயரதிகாரி அருள்சங்கர் ஏற்றுக்கொண்டு சுமந்த் என்ற காவலரோட உதவியோடு விசாரணையை தொடங்க ஆரம்பிக்கிறார் ஷ்யாம்.
விசாரணையில் எந்தவித ஆவணமும் துப்பும் கிடைக்காமல் இருக்கிறது இந்த சமயத்தில் ஷியாமை பார்க்க கல்லூரி நண்பர் ஒருவர் வீட்டிற்கு வருகிறார் ஷ்யாம் விசாரித்துக் கொண்டிருக்கும் அந்த தற்கொலைகளை பற்றி தெரியாத பல விஷயங்களை அவரிடம் சொல்வதோடு மட்டுமல்லாமல் திடீரென்று ஒரு நாள் அவரும் அவரைத் தேடி அங்கே வரும் மற்றொருவரும் ஷியாமின் கண் முன்னே தற்கொலை செய்து இறந்து விடுகிறார்கள்.
இந்த கற்பனைகளுக்கு காரணம் என்ன என்பதை ஷாம் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே அஸ்திரம் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : அரவிந்த் ராஜகோபால்
இசை : சுந்தரமூர்த்தி கே.எஸ்
தயாரிப்பு : தனசண்முகமணி
மக்கள் தொடர்பு : A ஜான்