நாளை வெளியாகிறது சிம்புவின் அஸ்வின் தாத்தா கெட்டப் டீசர்

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தி ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அந்த மூன்று வேடங்களுக்கும் ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா ஆகியோர் நடித்து வருகின்றனர். இன்னொரு நடிகையின் பெயரை படக்குழுவினர் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர். 
சிம்பு மூன்று வேடங்களில் இரண்டு வேடங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதாவது, மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கதாபாத்திரங்களின் கெட்டப்புகள் வெளிவந்துள்ளது. மதுரை மைக்கேல் கதாபாத்திரத்தில் 80-களில் உள்ள கெட்டப்புகளில் நடித்துள்ளார். அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தில் நரைத்த முடியும், வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில், மைக்கேல் கதாபாத்திரத்திற்குண்டான டீசர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதேபோல், அஸ்வின் தாத்தா கெட்டப்பில் வெளிவந்த போஸ்டர்களும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், அஸ்வின் தாத்தா கெட்டப்புக்குண்டான டீசரை நாளை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த டீசர் பூர்த்திசெய்யும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.