ஆக் ஷன் ஹீரோவாக சந்தானம் களமிரங்கும் படம் சக்க போடு போடு ராஜா,, கதாநாயகியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார்., காமெடியனாக விவேக் நடிக்கிறார். லொள்ளு சபா இயக்குனர் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் விவேக் பேசும்போது, ‘‘ஒரு காமெடியன் இன்னொரு காமெடியனை வைத்து படமெடுப்பது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. அது இந்த படத்தில் நடந்துள்ளது. இது மாதிரி இரண்டு மேஜர் காமெடியன்கள் ஒரு படத்தில் இணைந்து நடித்து பல நாட்களாகி விட்டது. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு படத்தில் காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என்று பல வேலைகள் இருந்தாலும் காமெடி போர்ஷனும் இருக்கிறது. அவருக்கென்று ஒரு போர்ஷனை உருவாக்கியது மாதிரி எனக்கும் ஒரு ஏரியாவை பிரித்து கொடுத்து நடிக்க வைத்துள்ளார். இது எதிர்காலத்தில் மற்ற பல காமெடி நடிகர்களுக்கும் நாமும் இது மாதிரி இணைந்து நடிக்கலாம் என்ற ஒரு உணர்வை தர வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற கதைகள் என்றால் சந்தானத்துடன் தொடர்ந்து நடிக்க நான் தயார்’’ என்றார்.
அதனை தொடர்ந்து சந்தானம் பேசும்போது, ‘‘என்னை எப்போதும் விட்டுக் கொடுக்காத என் நண்பன் ஆர்யா இங்கு வந்திருக்கிறார். ஆர்யா கூட நடிக்கும்போது தான் எனக்கு ஹெல்த் கான்சியஷஸ் வந்தது. இந்த படத்திற்கு நானும், விடிவி கணேஷும் இசை அமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜை போடலாம் என்று முடிவு செய்து அவரை போய் பார்த்தோம். அப்போது அவர் ரொம்பவும் பிசியாக இருந்ததால வேறு யாரை இசை அமைப்பாளரா போடலாம் என்று யோசித்தபோது, விடிவி கணேஷ் சிம்புவை டிரை பண்ணலாம் என்றார். ஹீரோவா இருக்கிற அவர் எப்படி இந்த படத்திற்கு இசை அமைப்பார் என்று நான் சொன்னபோது, விடிவி கணேஷ், ‘இல்ல உங்களுக்காக அவர் செய்வார், நாம் முயற்சிக்கலாம்’ என்றார். தயகத்துடன் சிம்புவை போய் சந்தித்தேன். நான் இசை அமைப்பாளரா, யோசித்து சொல்றேன் என்று சொன்னவர், இரண்டு நாட்கள் கழித்து ஒரு மெசேஜ் அனுப்ப அதில், உங்க படத்திற்கு யார் இசை அமைப்பாளர் என்று தெரியுமா? நான் தான்’ என்று அனுப்பியிருந்தார்.
என் நண்பன் சிம்புவுக்கு என் மீது பாசம் இருக்கிறது என்று எனக்கு தெரியும். ஆனால் இந்த அளவுக்கு பாசம் இருக்கிறது என்று எனக்கு முன்பு தெரியாது. உடனே எல்லா பாடல்களையும் கம்பொஸ் பண்ணி கொடுத்தார். ஒரு பாடலை எழுதியும் கொடுத்தார். இப்போது இந்த படம் இந்த அளவுக்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு சிம்புவும் ஒரு காரணம்.
வெளியில் பல பேருக்கு சிம்பு மீது பலதரப்பட்ட கோபம் வெறுப்பு இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி எல்லாம் எனக்க் கவலை இல்லை. அவரை மாதிரி ஒருத்தர் கிடைப்பது கஷ்டம். என்னை பொறுத்தவரைக்கும் சிம்பு எனக்கு ஒரு காட் ஃபாதர்! எல்லா நேரத்திலும் அவர் என் கூட பக்க பலாமாக இருந்திருக்கிறார், அவருக்கு இந்த நேரத்தில் ‘நன்றி’ என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதாது. வாழக்கை பூராவும் நான் அவருகு நன்றியுள்ளவனாக, கடமைப்பட்டவனாக இருப்பேன்’’ என்றார்.
நடிகர் ஆர்யா பேசுகையில் என் நண்பனை பார்த்து மிகவும் சந்தோசமாக இருக்கிறது அவருக்கு தைரியம் அதிகம் தன்னை தானே செதுக்கி கொண்டவர் அவர் ஹீரோ என்பது தெரியும் மாஸ் அக்ஷன் ஹீரோ என்பது சில நாட்களுக்கு முன் தான் தெரிந்தது எனக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் அடித்த இவருக்கே கையில் தையல் என்றால் அடிவாங்குனவன் நிலைமையை பாருங்க என்று காமெடி யாக பேசினார் அதோடு இந்த படம் மூலம் அக்ஷன் ஹீரோவாக களம் இறங்கும் நண்பனுக்கு பாராட்டுகள் நிச்சயம் மிக பெரிய வெற்றி பெரும் இந்த ‘சக்க போடு போடு ராஜா.’ என்றார் ஆர்யா.