ஏ ஆர் எம் (ARM) விமர்சனம்

லிஸ்டின் ஸ்டீபன், டாக்டர். ஜக்கரியா தாமஸ் தயாரிப்பில், ஜித்தின் லால் இயக்கத்தில், டொவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பசில் ஜோசப், ரோகிணி, ஹரிஷ் உத்தமன், நிஸ்தர் சைட், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஏ ஆர் எம்.

கேரளாவில் இருக்கும் சிறிய கிராமத்தில் வால் நட்சத்திரம் ஒன்று விழுகிறது.
பல ஆண்டுகள் கழித்து ராஜா ஒருவர் அதை பற்றி தெரிந்து நட்சத்திரத்தின் பகுதிகளை மீட்டெடுத்து தன்னுடைய ராஜ்யத்திற்கு எடுத்து செல்கிறார். அதனை வைத்து பல மர்மமான பொருட்களையும் சேர்த்து விளக்கு ஒன்றும் செய்கிறார். அது ஒரு அற்புதமான விளக்கு, அந்த விளக்கினால் பல நன்மைகளும் பல சக்திகளும் ஏற்படுகிறது.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில், தன் நாட்டை காப்பாற்றிய, போர் வீரனான டோமினோ தாமஸ்க்கு (குஞ்சிகேலு) என்ன வேண்டும் என்று கேட்க, அரசரும் அதனை கொடுக்கிறார்.

குஞ்சிகேலு மந்திர விளக்கை மீண்டும் தனது கிராமத்திற்கு (வால் நட்சத்திரம் விழுந்த கிராமம்) கொண்டு செல்ல விரும்புகிறார்.

குஞ்சிகேலு அந்த விளக்குடன் தனது கிராமத்திற்கு வருகிறார். கிராம மக்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். கொஞ்ச காலத்தில் குஞ்சிகேலுக்கு அம்மை நோய் தாக்கி இறக்கிறார்.
இது ஒரு காலகட்டம்.

அடுத்து தெய்வ விளக்கை திருடியதாக சொல்லி மணியன் டோனோ தாமஸுக்கு திருட்டு பட்டம் கட்டி, வெறுக்கப்படுகிறார். அவருடைய பரம்பரையை களங்கம் படுத்தி, தாழ்ந்த சாதி மக்களை விளக்கைக் கூட பார்க்க விடாமல் தடுக்கிறார்கள். அதனால் மணியன் அந்த விளக்கை திருடி சென்று விடுகிறான். ஊர் மக்கள் மணியனை அடித்து கொன்று விடுகிறார்கள் இது ஒரு காலகட்டம்.

அடுத்து மணியனின் செயல்கள் அவரது பேரனான அஜயன் டோவினோ தாமஸ் மீது திருடன் பரம்பரை என்று அவனை சொல்லி அசிங்கப்படுத்துகிறார்கள்.
கிராமத்தில் எந்த பொருள் எங்கு திருடு போனாலும் அதற்கு அதை தான் காரணம் என்று சொல்லி அவனை கலங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அஜயனுக்கும்,
லக்ஷ்மிக்கும் (கீர்ததி ஷெட்டி) காதலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. சாதி பாகுபாடும் நடந்து கொண்டிருக்கிறது அந்த கிராமத்தில்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் (ஹரிஷ் உத்தமன்) சுதேவ் அந்த மந்திர விளக்கை எடுத்து தரும்படி அஜயனை மிரட்டி வருகின்றார். தன் மீது விழுந்திருக்கும் திருட்டுப் பழியை போக்குவதற்கும், ஜாதி பாகுபாட்டை ஒழிப்பதற்கும், வேறு வழியில்லாமல் அஜயன் அந்த விளக்கைத் தேடி செல்கிறார். அப்பொழுது பல அதிர்ச்சிகரமான ரகசியங்கள் அஜீரணைக்கு தெரிய வருகிறது.

அஜயன் அந்த விளக்கை கண்டுபிடித்து சுதேசிடம் ஒப்படைத்தாரா? இல்லையா?
அஜயன் லட்சுமி காதல் கைகூடியதா? இல்லையா? தன் மீது விழுந்திருக்கும் திருட்டுப் பழியை போக்கினாரா? இல்லையா? என்பதே ஏ ஆர் எம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் : ஜித்தின் லால்
எழுத்து : சுஜித் நம்பியார்
தயாரிப்பு : லிஸ்டின் ஸ்டீபன், டாக்டர். ஜக்கரியா தாமஸ்
பேனர் : மேஜிக் ஃப்ரேம்ஸ்
இசை : திபு நினன் தாமஸ்
புகைப்பட இயக்குனர் : ஜோமோன் டி ஜான் இஸ்க்
எடிட்டர் : ஷமீர் முஹம்மது
இணை தயாரிப்பாளர் : ஜஸ்டின் ஸ்டீபன்
நிர்வாக தயாரிப்பாளர் : நவீன் பி தாமஸ், பிரின்ஸ் பால்
வரி தயாரிப்பாளர் : சந்தோஷ் கிருஷ்ணன்
ஆடை வடிவமைப்பாளர் : பிரவீன் வர்மா
சண்டைக்காட்சிகள் : விக்ரம் மோர், பியோனிக்ஸ் பிரபு
நடன இயக்குனர் : லலிதா ஷோபி
களரி ஸ்டண்ட் : பி.வி. சிவகுமார் குருக்கள்
கிரியேட்டிவ் டைரக்டர் : திபில் தேவ்
ஒலி வடிவமைப்பு : சச்சின் , ஹரிஹரன்
பாடல் வரிகள் : மனு மஞ்சித்
மக்கள் தொடர்பு : சதீஷ் எஸ்2மீடியா
தமிழ் டப்பிங் : மைசீ மூவிஸ்
டப்பிங் இயக்குனர் : ரிஷிகேஷ் கே
வசனங்கள் : ரமேஷ், அகரன், கைலாஷ்