ஆர் யூ ஓகே பேபி விமர்சனம்

மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில், சமுத்திரக்கனி, அபிராமி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மிஸ்கின், ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், முல்லையரசி, ரோபோ சங்கர், அசோக், அனுபமா குமார்
வினோதினி வைத்தியநாதன் ஆகையோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஆர் யூ ஓகே பேபி”.

அஷோக், முல்லையரசி இருவரும் பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த முல்லையரசி ஐந்து முறை கருக்கலைப்பு செய்துவிட்டு மீண்டும் கர்ப்பமாகிறார்.

எப்போதும் குடித்து விட்டு பொறுப்பில்லாமல் இருக்கும் அசோக்குடன் இருந்து எப்படி குழந்தையை வளர்ப்பது என்று யோசித்து மருத்துவமனையில் நர்ஸ் ஒருவரின் மூலம் குழந்தையை விற்று விடுகிறார் முல்லையரசி. இதற்காக
பத்திரத்திலும் கையெழுத்தும் இடுகிறார்.

அந்தக் குழந்தையை பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் சமுத்திரக்கனி – அபிராமி ஒப்படைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கின்றனர் அபிராமியும், சமுத்திரக்கனியும்.

தன் குழந்தை தனக்கு வேண்டும் என்று ஒருவருடம் கழித்து தனியார் சேனல் ஒன்று நடத்தும் நிகழ்ச்சிக்கு செல்கிறார் முல்லையரசி. அந்த சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்.

முல்லையரசியிடம் குழந்தை செல்ல முயற்சி செய்கிறார் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன். அதே சமயம் சிபி சிஐடி-யில் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.

அதன்பிறகு என்ன நடந்தது? குழந்தை முல்லையரசியிடம் ஒப்படைக்கப்பட்டதா? இல்லை அபிராமி சமுத்திரகனிடமே இருந்ததா? என்பதே படத்தின் மீதிக் கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
தயாரிப்பு : டாக்டர் ராமகிருஷ்ணன்
இசை : ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா
ஒளிப்பதிவு : கிருஷ்ணசேகர் டி.எஸ்
ஆடியோகிராபி : தபஸ் நாயக்
எடிட்டிங் : சி.எஸ்.பிரேம்குமார்
மக்கள் தொடர்பு : AIM