நடிகர் அரவிந்த்சாமி தனது தோற்ற பொலிவினாலும் , தனி பட்ட நடிப்பு திறமையாலும், தனது சீரிய கதை தேர்வு திறமையாலும் தனி ஒருவனாகவே அனைத்து தரப்பினரிடமிருந்து உயர்ந்த பாராட்டை பெற்று வருகிறார் என்றால் மிகை ஆகாது. தனது அடுத்த இன்னிங்க்ஸை சிறந்த கதைகளிளும், தேர்ந்த இயக்குனர்கள் மூலம் தொடங்கினார். தரமான கதைகளை தேடி பிடிக்கும் அவரது அடுத்த பெயரிடப்படாத புதிய படத்தை “சலீம்” புகழ் நிர்மல்குமார் இயக்க உள்ளார்.
தனது முந்தைய படைப்பான “சலீம்” மூலம் கதாபாத்திரத்திற்குள் தோன்றும் பல்வேறு உணர்வுகளை மிகவும் நேர்த்தியாக படைத்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற இயக்குனர், இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் அரவிந்த்சாமியின் நடிப்புத்திறனோடு கைகோர்க்கிறார்.
படத்தை பற்றி தயாரிப்பாளர் வி.மதியழகன் கூறுகையில், “இது ஒரு முழுமையான ஆக்சன் திரைப்படம். கதையில் நாயகன் அரவிந்த்சாமி இரண்டு லுக்கில் வருவதால் தனது உடல் எடையை கணிசமாக கூட்டியிருக்கிறார். படத்தின் முதல் பார்வை மார்ச் முதல் வாரத்திலும், படப்பிடிப்பு மார்ச் இறுதியிலும் தொடங்குமென எதிர்பார்க்கலாம்”
கலைப்பற்றையும் நம்பிக்கையையுமே முதலீடாக கொண்ட எக்ஸ்ட்ரா என்டெர்டைன்மெண்டின் 12 வது படைப்பாக இப்படம் தயாராகிறது. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கொலையுதிர் காலம், ஹன்சிகா நடிக்கும் மஹா, மற்றும் நடிகர் அருண் விஜயின் பாக்சர் ஆகிய திரைப்படங்களும் எக் ஸ்ட்ரா எண்டேர்டைன்மெண்ட் சார்பாக 2019 வெளிவரும் என்பது குறிப்படத்தக்கது.