அரண்மனை 4 விமர்சனம்

ஆவ்னி சினி மேக்ஸ் பி லிமிடெட் சார்பில், குஷ்பூ சுந்தர் & பேன்ஸ் மீடியா பி லிமிடெட் சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில், சுந்தர் .சி, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, டெல்லி கணேஷ், கருடா ராம், விடிவி கணேஷ், ‘மொட்டை’ ராஜேந்திரன், மறைந்த நகைச்சுவை நடிகர் சேஷீ, கே.எஸ். ரவிக்குமார், ஜெயபிரகாஷ், சிங்கம்புலி, தீரஜ் விஷ்ணு ரத்னம், எஸ்.நமோ நாராயணன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அரண்மனை 4.

சென்னையில் வக்கிலாக இருக்கும் சுந்தர்.சி தங்கை தமன்னா மற்றும் தன் அத்தை கோவை சரளாவுடன் வாழ்ந்து வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்டு தங்கை தமன்னா, கணவன் சந்தோஷ் பிரதாப் உடன் அடர்ந்த காடுகளுக்கு நடுவில் இருக்கும் அரண்மனையில் தன் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

சுந்தர்.சி தங்கை தமன்னா பிரிந்து இருந்தாலும் அவர் மீது அளவுக்கு அதிகமான பாசத்துடன் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில், ஒருநாள் அவரது தங்கை தமன்னாவும், கணவன் சந்தோஷ் பிராத்ப்பும் இறந்துவிட்டதாகச் செய்தி வந்ததும், தன் அத்தையுடன் தங்கை குழந்தைகளை பார்க்க அவர்கள் வாழ்ந்த அரண்மனைக்குச் செல்கிறார்.

அங்கே மேஸ்திரி யோகி பாபு & கார்பெண்டர் விடிவி கணேஷ், டாக்டர் ராஷி கண்ணா & அவரது தாத்தா ஜமீனான டெல்லி கணேஷ் ஆகியோர் அந்த அரண்மனையில் இருக்கின்றார்கள்.

தமன்னாவின் குழந்தைகளுக்கு ஆபத்தை இருப்பதை தெரிந்து கொள்ளும் சுந்தர்.சி, குழந்தைகளை எப்படி அமானுஷ்ய சக்திகளிடமிருந்து காப்பாற்றினார்? தமன்னா & சந்தோஷ் பிரதாப் மரணத்தின் மர்மம் என்ன? பல கொலைகள் நடப்பதற்க்கான காரணம் என்ன? யார்? குழந்தைகளை கொல்ல துடிக்கும் மர்மம் என்ன என்பதே அரண்மனை 4 படத்தின் மீதிக்கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள்

இசை : ஹிப்ஹாப் தமிழா
திரைக்கதை வசனம் : வெங்கட்ராகவன்
ஒளிப்பதிவு : ஈ.கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு : பென்னி ஓலிவெர்
கலை இயக்குனர் : குருராஜ்
சண்டை பயிற்சி : ராஜசேகர்
நடனம் : பிருந்தா
பாடல்கள் : கோசேஷா, விக்னேஷ் ஸ்ரீகாந்த், முத்தமிழ்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)