ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமம் ஒன்றில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். அவர்களது அன்றாட வாழ்விற்கு குடிநீரின்றி உப்பு தண்ணீரை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படும் அந்த ஊர் மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்காக பூமியில் ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுத்து வருகின்றனர். அந்த மாவட்டத்திற்கு ஆட்சியராக வருகிறார் நயன்தாரா.
மிகவும் நேர்மையான, நல்ல உள்ளம் படைத்த நயன்தாரா மற்றவர்களின் வலி, வேதனையை தனக்கு வந்ததாக நினைத்து அதற்கான தீர்வை கொடுக்கக்கூடியவர். இந்நிலையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆழ் துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது. அலறியடித்துக் கொண்டு கூடுகிற ஊர், செய்வதறியாமல் கை பிசைந்து நிற்க… அந்த மாவட்டத்தின் கலெக்டர் நயன்தாரா ஸ்பாட்டுக்கு ஓடோடி வருகிறார். அந்த குழந்தை உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
அந்த பிரச்சனைக்கு மாவட்ட ஆட்சியரான நயன்தாரா என்ன செய்தார்? அந்த குழந்தையை காப்பாற்ற என்ன மாதிரியான அணுகுமுறையை மேற்கொண்டார்? அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? அந்த குழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்