தாரகை சினிமாஸ் தயாரிப்பில், பாலு எஸ் வைத்யநாதன் இயக்கத்தில், பாலு எஸ் வைத்யநாதன், அஞ்சனா கீர்த்தி, மேகாலி மீனாட்சி, லொல்லு சபா ஜீவா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அறம் செய்.
அஞ்சனா கீர்த்தி தன்னுடைய குடும்பத்தை விட்டு அரசியல் ஒன்றே தன்னுடைய லட்சியம் என்று அதில் பயணம் செய்து வருகிறார் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது அரசியல் மற்றும் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.
ஆட்சி மாற்றம் மட்டும் போதாது அரசியலிலும் மாற்றம் தேவை என்று தன்னுடன் இருப்பவர்களை சேர்த்து கொண்டு தமிழக அரசு தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முயற்சி செய்து வருகிறார் அஞ்சனா கீர்த்தி.
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர் பாலு எஸ் வைத்யநாதன், லொல்லு சபா ஜீவா, மேகாலி மீனாட்சி.
இவர்கள் படிக்கும் கல்லூரியை அரசாங்கம் தனியாருக்கு கொடுக்க முயற்சி செய்து வருகிறது. பாலு வைத்யநாதன் & லொல்லு சபா ஜீவா இருவரும் இதனை எதிர்த்து கல்வித்துறை அமைச்சரிடம் முறையிடுகின்றனர்.
ஆனால், கல்வித்துறை அமைச்சரோ அதனை ஏற்க மறுக்க, பாலு வைத்யநாதன் கல்லூரி மாணவர்கள் சிலருடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் இறங்குகிறார்.
இவர்கள் விநாயகர் போராட்டத்தில் ஜெயித்தார்களா? இல்லையா? அஞ்சனா கீர்த்தியின் முற்றுகைப் போராட்டம் நடந்ததா? இல்லையா? என்பதே அறம் செய் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், ஒளிப்பதிவு : பாலு எஸ் வைத்யநாதன்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு : தாரகை சினிமாஸ்
மக்கள் தொடர்பு : சாவித்ரி