ஆர்கே கிரிட்டிவ் மேக்கர்ஸ் சார்பில், வீரா தயாரிப்பில், வசீகரன் பாலாஜி இயக்கத்தில், வினோத், பிரியா, டார்லிங் மதன், பி.எல்.தேனப்பன், வேலு பிரபாகரன், பிரியங்கா ரோபோ சங்கர், விஜய் சத்யா, வீரா, சுப்ரமணி, ஜீவன் பிரபாகர், செல்வா, வினோத் பிரான்சிஸ், மூர்த்தி, சித்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அப்பு.
அம்மா இல்லாத சிறுவன் அப்பு தந்தையுடன் வளர்ந்து வருகிறான். தன் மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் அப்புவின் அப்பா, கூலி வேலை செய்து கஷ்ட்டப்பட்டு வந்தாலும் தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.
ஒரு விபத்தில் அப்பா உயிரிழந்து விட, அப்புவின் படிப்பும், வாழ்க்கையும் இழந்து பல வித இன்னல்களுக்கு ஆளாகி நிற்கிறான்.
அப்பு வசித்து வரும் அதே பகுதியில் இருக்கும் கதா நாயகன் வினோத், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது வாழ்க்கையை இழந்து ரவுடியாகி விடுகிறார். வினோத்தை போலீஸ் என்கவுண்டர் செய்ய காவல் துறை முடிவு செய்கிறது.
பேப்பர் பொறுக்கி, எவ்வளவு கஷ்ட்டங்கள் பட்டாலும், படிக்க வேண்டும் என்ற அப்புவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? வினோத்தை போலீஸ் என்கவுண்டர் செய்ததா? இல்லையா? வினோத் வாழ்க்கை மாறியதா? இல்லையா? என்பதே அப்பு படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : ஆர்கே கிரிட்டிவ் மேக்கர்ஸ்
தயாரிப்பாளர் : வீரா
இயக்கம் : வசீகரன் பாலாஜி
இசை : ஆலன் விஜய்
மக்கள் தொடர்பு : ஜே. கார்த்திக்