அண்ணாதுரை திரைவிமர்சனம்

முதல்முறையாக அண்ணாதுரை, தம்பிதுரை என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அண்ணாதுரையாக வரும் விஜய் ஆண்டனி, தனது காதலியின் மறைவால் அவளது நினைவிலேயே வாடுகிறார். குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகிறார். தப்பு என்று தெரிய வந்தால் அதனை தட்டிக் கேட்க முதல் ஆளாக வரும் அண்ணாதுரை, யாராவது உதவி என்று வந்தால் கர்ணனாகவே மாறிவிடுகிறார். காதலியின் நினைவிலேயே இருக்கும் அண்ணாதுரை, வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஆனால் அண்ணாதுரை மீது ஜுவல் மேரிக்கு, காதல் வருகிறது. அவளது காதலை ஏற்க மறுக்கிறார் அண்ணாதுரை.

தம்பிதுரையாக வரும் மற்றொரு விஜய் ஆண்டனி அமைதியானவராக தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். பி.டி மாஸ்டராக இருக்கும் அவருக்கு, டயானா சாம்பிகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், திருந்தி வாழ முடிவு செய்யும் அண்ணாதுரை, ஜுவல் மேரியை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்கிறார். அதற்கு முன்னதாக தனது குடிப்பழக்கத்தை விட முடிவு செய்து, பாருக்கு செல்கிறார். அங்கு நடக்கும் எதிர்பாராத விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழக்கிறார். அதற்கு பொறப்பேற்றுக் கொண்டு அண்ணாதுரை சிறைக்கு செல்கிறார். பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வரும் அண்ணாதுரை, சிறை வாசலில் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படுவதை பார்க்கிறார். அதிலும் அந்த கொலையை தம்பிதுரை செய்வதை பார்க்கும் அண்ணாதுரை அதிர்ச்சி அடைகிறார்.

அண்ணாதுரை ஜெயிலில் இருந்த 7 ஆண்டுகளில் நடந்தது என்ன? அவனது வாழ்க்கையில் என்ன நடந்தது? அமைதியான இருக்கும் தம்பிதுரை கொலைகாரனாக மாறியது எப்படி?  தம்பிதுரை டயானா சாம்பிகாவை கரம்பிடித்தாரா? ஜுவல் மேரியுடன் அண்ணாதுரை சேர்ந்தாரா?  என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்