அஞ்சாமை விமர்சனம்

டாக்டர் எம் திருநாவுக்கரசு தயாரிப்பில், எஸ் பி சுப்புராமன் இயக்கத்தில், விதார்த், வாணி போஜன், ரஹ்மான், கிருத்திக் மோகன், விஜய் டிவி ராமர், தன்யா, பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் அஞ்சாமை.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தை சேர்ந்தவர் விதார்த் அவர் ஒரு கூத்துக்கட்டும் கலைஞர். அவர் தன் மனைவி வாணி போஜன், மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

விதார்த்தின் மகன் கிருத்திக் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெறுகிறார். அவருக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. இந்த சமயத்தில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.

கூலி வேலை செய்து மகனை படிக்க வைக்கும் விதார்த் மகனை நீட் கோச்சிங் சென்டரில் படிக்க வைக்கிறார். தமிழ்நாட்டில் தேர்வுக்கான மையத்தை தேர்வு செய்யும் கிருத்திக்கிற்கு ஜெய்பூரில் தேர்வு எழுத மையம் ஒதுக்கப்படுகிறது.

வேறு வழி இல்லாமல் விதார்த்தும் கிருத்திக்கும் ஜெய்ப்பூர் செல்கின்றனர். அங்கு தேர்வு மையத்தை கண்டுபிடித்து தேர்வு எழுத மகனை அனுப்புவதற்குள் படாத பாடு படுகிறார் விதார்த். ஒரு கட்டத்தில் மன உளைச்சலில் இறந்து விடுகிறார்.

தன்னுடைய அப்பாவின் இறப்புக்கு காரணம் அரசாங்கம் தான் என்று போலீசில் புகார் கொடுத்து கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார் கிருத்திக் மோகன்.
பிறகு என்ன நடந்தது? இந்த வழக்கை யார் எடுத்து விசாரிக்கிறார்கள்? தந்தையின் இறப்புக்கு நீதி கிடைத்ததா? இல்லையா? நீட் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்னவானது? என்பதே அஞ்சாமை படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : டாக்டர் எம் திருநாவுக்கரசு

இசை : ராகவ் பிரசாத்

ஒளிப்பதிவு : கார்த்திக்

இயக்கம் : எஸ் பி சுப்புராமன்

வெளியீடு : ட்ரீம் வாரியர்ஸ் பிச்சர்ஸ்

மக்கள் தொடர்பு : ஜான்சன்