பிரபல பாடகரும் ராக்ஸ்டார் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் Video Albumற்காக மீண்டும் ஒரு பாடலை தனக்காகப் பாடித் தந்தில் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் உற்சாகமடைந்துள்ளார். கணேஷும் அனிருத்தும் முன்பு நடிகர் விவேக்கின் எழுமின் படத்தில் இணைந்து பணியாற்றினர், இது கணேஷின் முதல் படமாகும். Album ஃபர்ஸ்ட் லுக்கை குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
“ஐத்தலக்கா” ஒரு தரமான பார்ட்டி குத்து பாட்டு, இப்பாடலுக்கு தமிழ் பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடனமாடுகிறார். அனிருத்துடனான அவரது ஒத்துழைப்பைப் பற்றி கேட்டதற்கு, அனி எளிமையானவர் மற்றும் எளிதில் அணுகக்கூடிய நபர் என்று கணேஷ் கூறினார். இந்தப் பாடலைப் பற்றி எனக்கு யோசனை தோன்றியபோது, நீங்கள் பாடினால் அருமையாக இருக்கும் என்று அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். சிறிதும் யோசிக்காமல் அந்தப் பாடலைப் பாட ஒப்புக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, அனியிடம் இருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, அதில் எனது மின்னஞ்சலை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார், அதில் அவர் அப்பாடலின் பதிவுகளை அனுப்பினார். நான் ஆச்சரியப்பட்டேன், ஏனென்றால் நான் அவருடைய ஸ்டுடியோவில் அவரது குரலைப் பதிவு செய்ய காத்திருந்தேன். ஆனால் தொற்றுநோய் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனிருத் தானே பதிவுசெய்து மெயிலில் அனுப்புவதன் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வுக்காகவும், பணியை எளிதில் முடித்துவிட்டார். இறுதிக் கலவையை முடிக்க சில நாட்களுக்குப் பிறகு சந்தித்தோம்.
கணேஷ் சந்திரசேகரன் முதன்முதலாக மியூசிக் வீடியோவில் தோன்றுவதால் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார். தான் வரும் போகும் காட்சியை மிகவும் பில்டப் ஆப் செய்து வரிசைப்படுத்தியதற்க்கு டைரக்டர் லோகேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்தார். நான் தர்ஷன் உடனும் ஸ்ரீதர் மாஸ்டர் உடனும் சேர்ந்து நடனமாடும் காட்சியை ரசிப்பீர்கள் என்று மேலும் கூறினார்.
இப்பாடலுக்கு நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் எளிமையான மற்றும் தனித்துவமான சிக்னேச்சர் ஸ்டெப் பை இயற்றியுள்ளார். இது இன்ஸ்டா ரீல்கள் மற்றும் சமூக தளங்களை உலுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜா குருசாமி பாடல் வரிகளை எழுதியுள்ளார், மாயோன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மியூசிக் வீடியோவை லஹரி மியூசிக் நிறுவனம் தயாரித்துள்ள. இந்தப் பாடலை மிகவும் எதிர்பார்ப்புடன் இக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.