“ஆந்திரா மெஸ்” விமர்சனம்

ஏ.பி.ஸ்ரீதர்,  பெரிய தாதாவான வினோத்திடம் கடன் வாங்கியிருப்பார். வினோத்தோ தன்னிடம் பணம் வாங்கியவர் திருப்பி தராவிட்டால் அவர்களிடம் இருந்து பொருளை திருடிவந்து விடுவார். நான் சொல்லும் ஒரு பொருளை திருடி வந்தால் கடனை திருப்பி தரவேண்டாம் என ஏ.பி.ஸ்ரீதரிடம், வினோத் கூறுகிறார்.
ஏ.பி.ஸ்ரீதரும், ராஜ் பரத், மதி, பாலாஜி ஆகியோருடன் சேர்ந்து பெட்டியை திருடுகிறார். அப்பெட்டியை திறந்து பார்க்கும்போது கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. பணத்தை வினோத்திடம் தரவேணாடம் நால்வரும் பிரித்துக் கொள்வோம் என்று முடிவெடுத்து வேறு மாநிலத்திற்கு சென்று விடுகின்றனர்.
அங்கே ஒரு ஜமீன் (அமர்) வீட்டில் தங்கி விடுகிறார்கள். அங்கு இருக்கும் நாட்களில் ராஜ் பரத்திற்கும் ஜமீனின் இளம் வயது மனைவி தேஜஸ்வினிக்கும் காதல் உண்டாகிறது. இவர்களின் காதல் ஜமீனுக்கு தெரிந்து ஜமீன் என்ன செய்தார்? தாதா வினோத், பணத்தை ஏமாற்றியவர்களை கண்டுபிடித்து என்ன செய்தார்? என்பது ஆந்திரா மெஸ் படத்தின் மீதிக்கதை.
ராஜ் பரத் காதல் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  உள்ளார். அவரது உயரத்திற்கு சண்டை காட்சிகள் அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வில்லனாக இப்படத்தில் அறிமுகமாகி கண்களிலேயே மிரட்டியுள்ளார். மதி, பாலாஜி, ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 
நாயகி தேஜஸ்வினி ரசிகர்களை கண்கள் துப்பாக்கியால் கைது செய்திருக்கிறார்.  பூஜாவின் நடிப்பு  ஓகே. ஜமீனாக வரும் அமரும், தாதாவாக வரும் வினோத்தும், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பிரசாந்த் பிள்ளையின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.
ஒரு யானை நடந்தால் 4 எறும்புகள் இறக்கும். அதுவே ஒரு யானை இறந்தால், 40 எறும்புகள் வாழும். அதாவது ஒரு கெட்டவன் வாழ்ந்தால், அவனை வைத்து நான்கு பேர் வாழ்வார்கள். அதுவே அவன் இறந்தால் 40 பேர் வாழ்வார்கள் என்ற கருத்தை சொல்ல  முயன்றுள்ளார் இயக்குனர் ஜெய். 
நடிகர்கள்:
ராஜ்பரத், தேஜஸ்வனி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா, பாலாஜி, மதி, வினோத், சையத், அமர் மற்றும் பலர்.
தொழிநுட்ப கலைஞர்கள்: 
இயக்கம் – ஜெய், இசை – பிரசாத் பிள்ளை, பாடல்கள் – குட்டி ரேவதி, மோகன்ராஜன், ஒளிப்பதிவு – முகேஷ்.ஜி, படத்தொகுப்பு – பிரபாகர், கலை – செந்தில் ராகவன், ஆடை வடிவமைப்பு – தாட்ஷா பிள்ளை, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், தயாரிப்பு – ஷோபோட் ஸ்டுடியோஸ் நிர்மல் கே.பாலா, பிஆர்ஓ. – குமரேசன்
“ஆந்திரா மெஸ்” சாப்பிடலாம்
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்