ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், தியாகராஜன் இயக்கத்தில், பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, லஷ்மி பிரதீப் ஆகியோர் நடிப்பில், பிரீத்தி தியாகராஜன் வழங்கும் ‘அந்தகன்-தி பியானிஸ்ட்’.
பார்வையற்றவராக இருக்கும் பிரசாந்த் பியானோ இசை கலைஞராகவும் இருக்கிறார். லண்டனில் நடைபெற இருக்கும் இசை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் பிரசாந்தின் லட்சியமாக இருக்கிறது. அதற்காக பியானோ க்ளாஸ் எடுத்து பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு சாலை விபத்தில் பிரசாந்திற்கு பிரியா ஆனந்துடன் நட்பு ஏற்படுகிறது, அதன் காரணமாக மதுபானக்கூடத்தில் பியானோ வாசிக்கும் வேலை பிரசாந்துக்கு கிடைக்கிறது.
அந்த மதுபான கூடத்தின் பியானோ வாசிப்பின் மூலம் நடிகர் கார்த்திக்கின் நட்பு பிரசாந்த் இருக்கு கிடைக்க அவருடைய திருமண நாளின் போது அவருடைய வீட்டிற்கு சென்று திரு நிகழ்ச்சி நடத்த பிரசாந்தை கார்த்திக் அழைக்கிறார்.
அதற்கான முன்பணத்தையும் கொடுத்து விட்டு செல்கிறார் நடிகர் கார்த்திக் இதனால் மறுநாள் கார்த்திக்கின் வீட்டிற்கு செல்கிறார் பிரசாந்த் அங்கு கார்த்திக்கின் மனைவி சிம்ரன் அவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
அங்கு ஒரு கொலை நடந்திருக்கிறது. அதன் மூலம் பிரசாந்த்திற்கு பலவிதப் சிக்கல்களும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதிலிருந்து பிரசாந்த் எவ்வாறு தப்பித்தார்? அந்த கொலைக்கும் பிரசாந்திருக்கும் சம்பந்தம் இருக்கிறதா? இல்லையா? என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கும் படமே அந்தகன்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு : ரவி யாதவ்
இசை : சந்தோஷ் நாராயணன்
கலை இயக்கம் : செந்தில் ராகவன் படத்தொகுப்பு : சதீஷ் சூர்யா
வசனம் : பட்டுக்கோட்டை பிரபாகர்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்