ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் அண்டாவ காணோம்

சில திரைப்படங்களின் கதைகள் தான் அதன் ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்கின்றன. அந்த வகையில் தனித்துவமான படங்களை மட்டுமே தன் பேனரில் தயாரித்து வரும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் ஜே. சதீஷ்குமார் தயாரித்திருக்கும் “அண்டாவ காணோம்” நல்ல கதையைக் கொண்டிருக்கும் ஒரு படமாக கருதப்படுகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை நிரூபித்த ஸ்ரேயா ரெட்டி, இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது முந்தைய படங்களை விட இந்த படத்தில் அழுத்தமாக நடித்திருப்பதாக கூறுகிறார் ஸ்ரேயா. அறிமுக இயக்குனர் வேல்மதி இந்த அண்டாவ காணோம் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் எற்கனவே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை  உருவாக்கியுள்ளார்.

“பூஜை விடுமுறை துர்கா தேவி கடவுளை அடையாளப்படுத்துகிறது. நவராத்திரி பண்டிகையே அரக்கர்கள் மீது துர்க்கை செலுத்தும் ஆதிக்கத்தை சொல்லும் ஒரு பண்டிகை தான். பெண்ணை மையப்படுத்திய இந்த கதையை, பூஜை நாட்களில் வெளியிடுவதை விட வேறு சிறந்த அம்சம் என்ன? இப்போது உச்சத்தில் இருக்கும் நாயகியை மையப்படுத்திய கதைகளின் ட்ரெண்டை உருவாக்கியதே இந்த படம் தான். இந்த படத்தில் அவர் நிறைய உழைத்திருக்கிறார். தேசிய அளவில் அதற்கான அங்கீகாரத்தை பெறுவார் என்று நம்புகிறேன். குடும்பத்துடன் பார்க்கும் பொழுதுபொக்கு படங்களை தேர்வு செய்யும் தனது கதைத் தேர்வு திறமையை மீண்டும் நிரூபிப்பார். பெண்களின் சக்தி என்ன என்பது வரும் அக்டோபர் 18ஆம் தேதி தெரியும் என்றார் தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார். 

பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்ய, சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பு செய்ய, முத்து கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். அஷ்மா மித்ரா இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வேல்மதி.