அனந்தா விமர்சனம்

கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில், ஜெகபதிபாபு, ஒய் ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, சுகாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அனந்தா. 

ஐந்து பக்தர்கள் தங்களுடைய வாழ்வில் சாய்பாபாவால் நடந்த அனுபவங்களை விவரிக்கிறார்கள். 

முதலாவதாக, தொழிலதிபராக இருக்கும் ஜெகபதி பாபு நன்றாக பிசினஸ் செய்து மிகவும் பணக்காரராக இருந்து வருகிறார். விமானத்தில் பயணம் செய்யும்போது ஏற்படும் சில மாற்றங்களால் சாய்பாபாவின் அருளாலும் பக்தி பாதைக்கு மாறுகிறார். வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு ஒரு கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சிலரை எப்படி மாற்றுகிறார் என்பதை சொல்கிறார். 

இரண்டாவதாக தன்னுடைய மனைவி திடீரென இறந்து போகிறார், அதனால் கடவுள் மீது அதிருப்தி ஏற்படுகிறது ஒய் ஜி மகேந்திரனுக்கு. அதற்குப் பிறகு மனைவியை குறித்த பல செய்திகள் அவருக்கு தெரியவர பிறகு எப்படி சாய்பாபாவை ஏற்றுக் கொள்கிறார் என்பது. 

மூன்றாவதாக பரதநாட்டிய கலைஞராக இருக்கும் அபிராமி வெங்கடாஜலத்துக்கு அவருடைய அரங்கேற்றத்திற்கு முன்பு காலில் பிரச்சனை ஏற்பட்டு, அவரால் நடனம் ஆட முடியாமல் போய்விடுகிறது. அப்பொழுது அவருடைய தந்தையான தலைவாசல் விஜய் கடவுள் நம்பிக்கை இழந்து கடவுளை திட்டுகிறார். அந்த சமயத்தில் அபிராமி புட்டபத்தி சாய்பாபாவை பிரார்த்திக்க பிறகு என்ன நடந்தது.

நான்காவதாக தன்னுடைய ஒரே மகன் கங்கை நதியில் மூழ்கி மரணத் தருவாயில் இருக்கும் பொழுது டாக்டர்கள் கைவிட்டு விட பாபாவை கும்பிடுகிறார் சுகாசினி அதன் பிறகு என்ன நடந்தது.

ஐந்தாவதாக பாபாவின் பக்தர்களாக இருக்கும் இரண்டு பேர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டை சுற்றி காட்டுத்தீ எழுகிறது அந்த காட்டுத்தீயிலிருந்து பாபா அவர்களை எவ்வாறு காப்பாற்றினார்.

இப்படி ஐந்து நபர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களை பற்றி சொல்வதே அனந்தா படம்.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : க்ரிஷ் கிருஷ்ணமூர்த்தி 

இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா 

ஒளிப்பதிவு : சஞ்சய் 

இசை : தேவா 

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது