தமிழ் சினிமாவிற்கு ராம், பருத்திவீரன் என தரமான படங்களை கொடுத்தவர் அமீர். இவருடைய நெருங்கிய நண்பர் தான் சினேகன். அமீரின் அனைத்து படங்களிலும் பல பாடல்களை சினேகன் எழுதியுள்ளார், ஆனால், சினேகன் பிக்பாஸ் சென்றதே அமீருக்கு தெரியாதாம். அவர் அதுக்குறித்து ஒரு முறை கூட தன்னிடம் சொல்லவில்லை என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் ஒருபோதும் பார்த்தது இல்லை. அந்த பாவத்தை மட்டும் நான் செய்ய மாட்டேன் என கிண்டலாக கூறியுள்ளார், அமீர் தற்போது சந்தனத்தேவன் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார்.