மன நிம்மதிக்காக யோகா மற்றும் தியானத்தில் கவனம் செலுத்தும் அமலாபால்

தமிழ், மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால். 2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்கிறார். ‘ஆயுஷ்பவன்’ என்ற இந்த படத்தில், இந்து வாலிபனை காதலிக்கும் முஸ்லிம் பெண்ணாக அமலாபால் வருகிறார். இயக்குனர் சரண்தேஜ் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார். இது இவர் இயக்கி நடிக்கும் முதல் தெலுங்கு படம்.

இந்த படத்தில் அமலாபாலின் காதலுக்கு ஆதரவு அளிக்கும் வேடத்தில் சினேகா உல்லல் நடிக்கிறார். இதற்கிடையே அமலாபால், மன நிம்மதிக்காக தினமும் யோகா, தியானம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதனால் மன அமைதி கிடைப்பதாகவும், கவலைகளை மறக்க முடியும் எனவும், ஆகவே, அனைவரும் யோகாசனம் செய்யும்படியும் வற்புறுத்தி வருகிறார் அமலா பால். அத்துடன் அமலாபால், தினம் காலையில் விதம் விதமாக யோகாசனம் செய்யும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.