சேலம் கச்சராயன் ஏரியை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதையொட்டி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சேலம் கச்சராயன் ஏரியை மு.க.ஸ்டாலின் பார்வையிட தடை போட கூடாது மேலும் தமிழகம் முழுவதும் திமுக தூர்வாரிய எந்த ஏரிகளை வேண்டுமானாலும் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏரியை பார்வையிட ஸ்டாலின் தரப்பில் 25 நபர்கள் கூட இருக்கலாம் மேலும் பார்வையிடுவதற்கு முன்பு அது குறித்து தகவலை காவல்துறைக்கு ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.