‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது

பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்கிறது. இந்தத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 22, 2024 அன்று வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது.
இயக்குநர் பாயல் கபாடியா மற்றும் நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் இந்தப் படத்தின் உலகளாவிய பயணம் மற்றும் இந்தியாவில் அதன் வெளியீடு குறித்தான தங்கள் எண்ணங்களை மும்பையில் இன்று (17.10.2024) நடந்த   பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர்.படவெளியீடு பற்றி இயக்குநர் பாயல் கபாடியா பேசியதாவது, “இந்த படத்தை செதுக்க பல வருடங்கள் எடுத்துக் கொண்டோம். மேலும் ஸ்பிரிட் மீடியாவுடனான இணைந்திருப்பது படத்தை அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் எடுத்து செல்லும் என்பதில் உற்சாகமாக இருக்கிறோம். என்னுடைய படம் இந்தியத் திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. இந்திய பார்வையாளர்கள் திரையரங்குகளில் டிக்கெட் வாங்கி பெரிய திரையில் படத்தைக் கொண்டாடுவதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்றார்.

நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி பேசியதாவது, “இந்தியத் திரையரங்குகளில் இந்த சிறந்த படம் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் அர்த்தமுள்ள கதைகளைக் கொண்டு வருவதை ஸ்பிரிட் மீடியா நோக்கமாகக் கொண்டுள்ளது. பாயலின் அழகான இந்தத் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

நவம்பர் 22, 2024 அன்று மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கொல்கத்தா உட்பட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படம், பிரான்சின் பெட்டிட் சாகோஸ் மற்றும் இந்தியாவின் சாக் & சீஸ் ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ இண்டோ-பிரெஞ்ச் கூட்டுத் தயாரிப்பாகும்.  இத்திரைப்படத்தை இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் ஸ்பிரிட் மீடியா விநியோகிக்கிறது.
 
சாக் & சீஸ் படங்கள் பற்றி:

சாக் அண்ட் சீஸ் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மீடியாவிற்கான கமர்ஷியல் தயாரிப்பதில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் அதன் முதல் முயற்சியாகும்.

ஸ்பிரிட் மீடியா பற்றி:

இந்த நிறுவனம் கடந்த2005 ஆம் ஆண்டு ராணா டகுபதி நிறுவினார். கதைகள், விநியோகம், திறமை மேலாண்மை, ஆக்கப்பூர்வமான பிராண்ட் மார்க்கெட்டிங் சேவைகள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க சந்தை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக ஸ்பிரிட் மீடியா விளங்குகிறது.