DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் பிரொடக்ஷன்ஸ் சார்பில், சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணி தயாரிப்பில், எஸ் பி சக்திவேல் இயக்கத்தில், குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொற்றவை, தீக்ஷா, மஞ்சுநாதன் ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள படம் அலங்கு.
கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி பகுதியில் நாயகன் தர்மன் (குணாநிதி) தன்னுடைய அம்மா தங்கம் (ஸ்ரீரேகா) மற்றும் தன் தங்கையுடன் மலை பகுதியில் உள்ள காட்டில் வசித்து வருகிறார்.
அம்மா ஸ்ரீரேகா தனது மகனை வட்டிக்கு கடன் வாங்கி டிப்ளமோ படிக்க வைக்கிறார்.
அந்த ஊரில் ஒரு நாயை கொள்ளச் சொல்கிறார். அந்த நாயை காப்பாற்றி தன்னுடன் வளர்த்து வருகிறார் குணாநிதி.
கல்லூரியில் ஏற்படும் பிரச்சனை யால் குணாநிதியை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்கின்றனர்.
அதனால் கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தன் அம்மாவிடம் கடன் கொடுத்த நபர் கடனை கேட்டு தொந்தரவு செய்ய கடனை அடைப்பதற்காக கேரளாவிற்கு வேலைக்கு செல்கிறார். குணாநிதியுடன் அவருடைய நண்பர்களும் செல்கின்றனர். அவர்கள் கூடவே தன் அந்த நாயையும் கூட்டிக்கொண்டு செல்கிறார்கள்.
கேரளாவில் இவர் வேலைக்குச் செல்லும் ரப்பர் தோட்டத்தின் முதலாளியாக இருப்பவர் தான் செம்பன் வினோத்திற்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தை மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் செம்பன் வினோத்.
அந்தக் குழந்தையின் பிறந்தநாள் அன்று நாய் ஒன்று அந்த குழந்தையை கடித்து விட அதனால் கோபம் கொண்ட செம்மண் வினோத் ஊரில் இருக்கும் அனைத்து நாய்களையும் கொள்ளச் சொல்கிறார்.
செம்பனின் எல்லா வேலைகளிலும் துணையாக இருந்த சரத் அப்பானி பணம் கொடுத்து எல்லா நாயையும் கொள்கிறான்.
அப்படி கொல்வதற்காக குணாநிதியின் நாயையும் பிடித்து சென்று விடுகின்றனர். அந்த நாயை விடுவிக்க குணாநிதி சரத் அப்பானியிடம் சண்டை விட அதில் சரத்தின் கைதுண்டாகி விடுகிறது.
இதனால் சரத் கோபப்பட்டு குணாநிதியையும் அவருடைய நண்பர்களையும் கொன்றே தீர வேண்டும் என்று கொலை வெறியுடன் இருக்கிறார்.
சரத்அப்பானியிடமிருந்து குணாநிதியும் அவருடைய நண்பர்களும் தப்பித்தார்களா? இல்லையா? அவர்களின் நாய் என்னானது? என்பதே அலங்கு படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் : DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் பிரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணி
விநியோகஸ்தர் : சக்தி பிலிம் பேக்டரி B. சக்திவேலன்
இயக்குனர் : SP சக்திவேல்
இசை : அஜீஷ்
ஒளிப்பதிவு : பாண்டிக்குமார்
படத்தொகுப்பு : சான் லோக்கேஷ்
கலை இயக்குனர் : ஆனந்த்
சண்டை : தினேஷ் காசி
மக்கள் தொடர்பாளர் : இரா. குமரேசன்
நிர்வாக தயாரிப்பாளர் : ஷங்கர் பாலாஜி