ஐஸ்வர்யா – செளந்தர்யாவா இரண்டு பேரும் திறமையானவர்கள் – தனுஷ்

 

விஐபி 2 வின் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் சென்னையில் நடை பெற்றது. அப்போது பேசிய தனுஷ், வசுந்தரா கதாபாத்திரத்திற்கு கஜோலைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதேபோல் ரகுவரன் குடும்பத்தின் பாசம் நேசம் அடிதடி அமலாபால் உடனான ஊடல் கூடல் எல்லாம் அப்படியே தான் இருக்கும் என்றார்.

ஆனால், காஜோலில் மார்கெட் பெரிது. அதற்கேற்றார்ப்போல் படத்தின் இசையும் , உருவாக்கமும் சற்று மாறியிருக்கும் என்றார். வழக்கம்போலவே ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்கில் அசத்தியிருப்பதாக சொன்னார் தனுஷ். இந்தப் படத்திற்கு அனிருத்தைவிட சான் ரோல்டன் இசையமைத்தது தான் பொருத்தமாக இருந்தது, விஐபி 2 இன் கதையின் கரு, பவர் பாண்டி இயக்கிக் கொண்டிருந்தபோது எனக்கு உதித்தது.

விஐபி 3 க்கான கதையை இன்னும் எழுதவில்லை. எழுதி முடித்தபிறகு தான் அதனை யார் இயக்குவார் என்பதை முடிவு செய்யப்படும் என்றார். விஐபி 2 வரும் ஜூலை 28 ஆம் தேதி தனது  பிறந்த நாளில் வெளியாக இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி..” என்று கூறினார் தனுஷ். 

மேலும், திரைப்பட இயக்கத்தில் சிறப்பாக செயல்பட்டவர் ஐஸ்வர்யாவா அல்லது செளந்தர்யாவா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இரண்டு பேரும் திறமையானவர்கள் ,டெடிகேஷனோடு பணியாற்றக் கூடியவர்களதான் என்றார். 20 வருடங்களுக்குப் பிறகு கஜோல் தமிழ்ப்படத்தில் அதுவும் எங்கள் படத்தில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி என்றார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த். முன்னதாக பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி, விஐபி 2 ஆம் பாகத்திற்கு தனுஷ் அழைத்தார் வந்தேன், இதேபோல் அவர் பத்தாம் பாகம் வரை எடுத்து, அதிலும் நடிக்க அழைத்தாலும் வருவேன் என்றார்.