ஐந்தாம் வேதம் இணைய தொடர் விமர்சனம்

அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில், அபிராமி ராமநாதன் தயாரிப்பில், மர்மதேசம் இயக்குனர் நாகா இயக்கத்தில், சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் தான் “ஐந்தாம் வேதம்”. ஜீ5-ல் வரும் வெள்ளி முதல் இத்தொடர் ஸ்டிரீமாக உள்ளது.

பூஜை செய்வதற்காக காசிக்கு செல்கிறார் தன்ஷிகா. அங்கு சாமியார் ஒருவர் தன்ஷிகா கையில் மரப்பெட்டி ஒன்றை கொடுக்கிறார். அதனை தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஐயங்கார் புரம் என்ற கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்.

உன் வம்சத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த மரப்பெட்டியை கொடுக்க வேண்டும் என்பது விதி என்று சொல்லி தன்ஷிகாவின் கையில் கொடுத்துவிட்டு இறந்து விடுகிறார்.

தன்ஷிகாவும் வேண்டா வெறுப்பாக வேறு வழி இல்லாமல் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு பாண்டிச்சேரி செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் பிறகு நடக்கும் சில சம்பவங்கள் தன்சிகாவை ஐயங்கார் புறத்திற்கு அழைத்து வருகிறது.

அந்த ஊரில் இருக்கும் பழமை வாய்ந்த கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் பூசாரியிடம் அந்த மரப்பெட்டியை தன்ஷிகா கொடுக்கிறார். ஆனால், அந்த மரப்பெட்டியை பற்றி ஏற்கனவே தெரிந்து இருந்த பூசாரி அதனை வாங்க மறுக்கிறார்.

அவர் வாங்க மறுப்பதால் அந்த பெட்டியை கோவிலிலேயே வைத்துவிட்டு சென்றுவிட நினைக்கிறார் தன்ஷிகா. ஆனால் அந்த கிராமத்தை விட்டு தன்ஷிகாவால் வெளியில் செல்ல முடியவில்லை.

இது மட்டும் இன்றி, அந்த மரப்பெட்டியை அடைவதற்கு பலரும் முயற்சி செய்கின்றனர். அந்தப் பெட்டியில் உள்ள மர்மம் என்ன? எதற்காக அந்த பெட்டியை அடைய முயற்சி செய்கிறார்கள்? என்பதே ஐந்தாம் வேதம் இணைய தொடருடைய மீதி கதையாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் அந்த ஐந்தாம் வேதத்தை கண்டுபிடிக்க தடையாக இருப்பவர்கள் யார்? எதற்காக தடையாக இருக்கிறார்கள்? என்பதையும் விவரிக்கிறது ஐந்தாம் வேதம் இணைய தொடர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் : அபிராமி ராமநாதன் நல்லம்மை ராமநாதன்
இயக்குனர் : நாகா
ஒளிப்பதிவு : சீனிவாசன் தேவராஜ்
இசை : ரேவா