அதிமுக அணிகள் இணைகிறாதா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பிறகு, இரு அணிகளும் விரைவில் இணைவோம் என எடப்பாடி அணி தரப்பில் கூறிள்ளனர்.  வரும் 5ஆம் தேதி முதல் அதிமுக அணிகளை இணைக்க தான் நடவடிக்கை எடுக்கத் துவங்கவுள்ளதாக டிடிவி தினகரன் கூறிய பிறகு, இரு அணிகளையும் இணைக்க வேண்டிய பேச்சுவார்த்தைகள் மீண்டும் மும்முரமாக துவங்கியுள்ளன. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

ஆனால், அணிகளின் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தவில்லை என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது. தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இரு அணிகளும் இணையும் பேச்சுக்கே இடமில்லை, என ஓபிஎஸ் அணியின் மா.ஃபோய் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாளை பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க பெங்களூரு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.