மழையின்மை காரணமாக ஏற்பட்ட வறட்சி, ரூபாய் நோட்டு மாற்றம் ஆகிய காரணங்களினால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், 5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது மற்றும் வறட்சி ஆகிய காரணங்களால் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனை திருப்பி செலுத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு 2 மாதம் அவகாசம் அளித்துள்ளது. மேலும், விவசாயிகள் மீதான 660.5௦ கோடி ரூபாய் (நவம்பர்-டிசம்பர் மாதத்துக்கானது. பயிர்க்கடன் வட்டியை தள்ளுபடி செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர, கிராமங்களில் வீடுகள் கட்டுவதை ஊக்குவிக்க 2 லட்சம் ரூபாய் வரை வட்டி மானியம் அளிக்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.